வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி..!

 

வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி..!

ஒரு போகப் பாசனத்திற்காக வைகை அணையில் இருக்கும் நீரைத் திறந்து விடும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். 

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கன மழை பெய்து வருவதால், தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பருவ மழை துவங்கியதும் வைகை அணைக்கு நீர் வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் ஒரு போகப் பாசனத்திற்காக வைகை அணையில் இருக்கும் நீரைத் திறந்து விடும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். 

Vaigai dam

அதன் படி, இன்று வைகை அணையிலிருந்து 1,130 கன அடி நீர்ப் பாசனத்திற்காகத் திறந்து விடப் பட்டுள்ளது. திறந்து விடப்பட்ட நீர் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஒரு 1 லட்சத்து 5 ஆயிரம் விளைநிலங்கள் பயன் பெரும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து வைகை அணையிலிருந்து நீர் திறக்கப் படுவதால், தேனி ஆட்சியர் பல்லவதேவ் மற்றும் மதுரை ஆட்சியர் செல்வராஜ் இருவரும் நீர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

Vaigai dam

மேலும், வைகை அணையிலிருந்து நீர் தொடர்ந்து 120 நாட்களுக்குப் பாசனத்திற்காகத் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப் பட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.