முழு ஊரடங்கு எதிரொலி: இந்த ரயில்கள் எல்லாம் ரத்து!

 

முழு ஊரடங்கு எதிரொலி: இந்த ரயில்கள் எல்லாம் ரத்து!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பும் 300ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேற்கொண்டு பாதிப்பைக் கட்டுப்படுத்த மே 24ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதியம் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகள் இயங்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு எதிரொலி: இந்த ரயில்கள் எல்லாம் ரத்து!

இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து காலை 07.35 மணிக்கு புறப்படும் வண்டி 06321 நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 08.00 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை மே 14 முதல் மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் கோயம்புத்தூர் – மயிலாடுதுறை சிறப்பு ரயில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – மங்களூரு சிறப்பு ரயில், கோயம்புத்தூர் – மங்களூர் சிறப்பு ரயில் ஆகியவையும் மே 14 முதல் மே 31 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.