முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது அதிமுக-தான்! – முதல்வர் பெருமிதம் 

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது அதிமுக-தான்! – முதல்வர் பெருமிதம் 

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தி, பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வனப்பகுதிகளில் மரம் வெட்டுவதற்கான பணிகளுக்கு கேரள அரசு அனுமதிக்கவில்லை.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியது அ.தி.மு.க அரசுதான் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தி, பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், வனப்பகுதிகளில் மரம் வெட்டுவதற்கான பணிகளுக்கு கேரள அரசு அனுமதிக்கவில்லை.

mullai

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது இரு மாநில பிரச்னையாக இருக்கக் கூடிய நிலையில் இதனை சுமுகமாக அணுக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பு பெற்று முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தி அதனை 152 அடியாக உயர்த்துவோம்.
எந்த ஒரு புதிய அணை கட்ட வேண்டும் என்றாலும் கீழ்ப் பகுதியில் உள்ள மாநிலத்தின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு எந்த அனுமதியும் தற்போது பெறப்படுவதில்லை. கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து பரம்பிக்குளம், ஆழியாறு, ஆனைமலையாறு நீராறு உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது” என்றார்.