இந்த 5 காரணங்களுக்காக டிராகன் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்!

 

இந்த 5 காரணங்களுக்காக டிராகன் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான லேட்டஸ்ட் பழம் என்றால் அது டிராகன் பழமாகத்தான் இருக்கும். சப்பாத்திக் கள்ளி போலக் காணப்படும் இந்த பழம் இன்றைக்கு எல்லா டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் காணலாம். நம் ஊரில் இல்லாத ஊட்டச்சத்து இதில் உள்ளதாக கருதி பலரும் இதை வாங்குவதால் மிகவும் பிரபலமான பழங்களுள் ஒன்றாக டிராகன் ஃப்ரூட்ஸ் மாறிவிட்டது.

இந்த 5 காரணங்களுக்காக டிராகன் பழத்தை எடுத்துக்கொள்ளலாம்!

நம் ஊர் பழம் இல்லை என்றாலும் ஊட்டச்சத்துக்கு ஒன்றும் குறைவு இல்லை. அதற்காக நம் ஊர் பழத்தில் இல்லாத ஊட்டச்சத்து இதில் உள்ளது என்ற அர்த்தமும் இல்லை. டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நன்மைகள் பற்றி பார்ப்போம்.

ஒரு கப் டிராகன் பழத்தில் (தோராயமாக 227 கிராம்) 136 கிராம் கலோரி, 3 கிராம் புரதம், கொழுப்பு – 0, கார்போஹைட்ரேட் 29 கிராம், நார்ச்சத்து 7 கிராம், இரும்புச்சத்து ஒரு நாள் தேவையில் 8 சதவிகிதம், மக்னீஷியம் ஒரு நாள் தேவையில் 18 சதவிகிதம் உள்ளது. இது தவிர வைட்டமின் சி, இ உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த பழம் என்பதால் பல்வேறு நோய்களுக்கு எதிராக இது திறம்படச் செயல்படுகிறது. வைட்டமின் சி உள்ளதால் சில வகையான புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் புற்றுநோய், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் அனைவருக்கும் ஏற்ற பழமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு பெண்களுக்கு 25 கிராம் நார்ச்சத்தும் ஆண்களுக்கு 38 கிராம் நார்ச்சத்தும் தேவை. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் செரிமானம், டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துதல், ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல் என பல வகையில் இது உதவியாக உள்ளது.

நம்முடைய குடலில் 400க்கும் மேற்பட்ட வகையான பல லட்சம் கோடி பாக்டீரியா வசிக்கின்றன. இந்த பாக்டீரியா குடியிருப்பில் ஏற்படும் மாறுபாடுகள்தான் நம்முடைய உடலில் நோய்கள் ஏற்பட காரணம் என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். டிராகன் ஃப்ரூட் ஒரு ப்ரோபயாடிக் அதாவது இந்த பாக்டீரியாவுக்கு நன்மை செய்யும் உணவாக அமைந்துள்ளது. இதன் காரணமாக குடலில் நல்ல பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரிக்கும்.

வைட்டமின் சி, கரோட்டினாய்ட்ஸ் உள்ளதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இதன் காரணமாக நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு குறைகிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் நோய்க் கிருமிகளுக்கு எதிராகப் போராடுகின்றன. ஆனால் இவை ஃப்ரீராடிக்கல்ஸ்க்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிப்பைக் குறைக்கும் ஆற்றல் டிராகன் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கு உள்ளது.