‘விருத்தாசலம் தொகுதியை’ பிரேமலதா ஏன் சூஸ் பண்ணாரு தெரியுமா?

 

‘விருத்தாசலம் தொகுதியை’ பிரேமலதா ஏன் சூஸ் பண்ணாரு தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் தொடருவோம் என்று கூறிய தேமுதிக, திடீரென கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறியே இதற்கு காரணம். ஜெயலலிதா காலத்தில் இருந்தே கூட்டணியில் இருந்து வரும் தேமுதிகவுக்கு முன்னுரிமை கொடுக்காமல், பாஜக மற்றும் பாமகவுக்கு அதிமுக முன்னுரிமை கொடுத்தது மற்றொரு காரணம்.

‘விருத்தாசலம் தொகுதியை’ பிரேமலதா ஏன் சூஸ் பண்ணாரு தெரியுமா?

கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு யாருடன் கூட்டணி அமைப்பது என்று தெரியாமல் தேமுதிக திணறியது. 2011ல் திமுகவையே வீழத்தி எதிர்க்கட்சியாக அமர்ந்த தேமுதிகவுக்கா இப்படி ஒரு நிலைமை என்றெல்லாம் யோசிக்க தோன்றியது. அப்போது தான், தேமுதிகவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கதவைத் திறந்தார். 60 தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கி கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.

‘விருத்தாசலம் தொகுதியை’ பிரேமலதா ஏன் சூஸ் பண்ணாரு தெரியுமா?

அதன் படி, தேமுதிக போட்டியிடும் அந்த 60 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. விருதாச்சலத்தில் பிரேமலதா போட்டியிடுவது அந்த பட்டியல் மூலம் தெரிய வந்தது. பட்டியலில் விஜயகாந்த், விஜயபிரபாகரன், சுதீஷ் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. சரி.. ஏன் பிரேமலதா விருத்தாசலத்தை தேர்ந்தெடுத்தார் என்பதை இப்போது பார்க்கலாம். எல்லாம் ஒரு சென்டிமென்ட்டாக தான் என்கிறார்கள் சிலர்..

‘விருத்தாசலம் தொகுதியை’ பிரேமலதா ஏன் சூஸ் பண்ணாரு தெரியுமா?

2006ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக தனித்து களம் கண்டது. அந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற தொகுதி தான் விருத்தாசலம். பாமகவின் கோட்டையாக இருந்த விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி வாகையை சூடியது எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அவருக்கென அங்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. அதனால், விஜயகாந்த் சென்டிமன்ட்டை பின்பற்றி பிரேமலதா அங்கு களமிறங்குகிறார்…!