Home தொழில்நுட்பம் 5ஜி ஸ்பீடுடன் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் - ரியல்மி வெளியிடும் Realme X7 Max 5G!

5ஜி ஸ்பீடுடன் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் – ரியல்மி வெளியிடும் Realme X7 Max 5G!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெருமளவு பங்கு வைத்திருக்கும் சீன நிறுவனம் ஜியோமி. இந்த நிறுவனம் மலிவான விலை முதல் லக்ஸரி விலை வரையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மக்களால் எளிதில் வாங்க கூடிய ஸ்மார்ட்போன்களாக ஜியோமியின் தயாரிப்புகள் இருக்கின்றன. மற்றொரு சீன நிறுவனமான ஜியோமியின் அம்சங்களை உள்ளடக்கி இந்திய சந்தையில் களமிறங்கியது.

5ஜி ஸ்பீடுடன் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் - ரியல்மி வெளியிடும்  Realme X7 Max 5G!
Realme X7 Max 5G Pre-orders Will Bundle a Free Realme Buds Q to Sweeten the  Deal Starting May 31 - MySmartPrice

மிகக் குறுகிய காலத்திலேயே ஜியோமிக்குப் போட்டியாக அதிவேக வளர்ச்சியடைந்துள்ளது ரியல்மி நிறுவனம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு தற்போது முக்கிய அம்சத்தை இணைத்து லக்ஸரி ஸ்மார்ட்போன் ஒன்றை இறக்கியிருக்கிறது. Realme X7 Max 5G என்ற பெயர் கொண்ட அந்த ஸ்மாட்போன் MediaTek Dimensity 1200 chipset பிராஸஸரை கொண்ட இந்தியாவின் முதல் தொலைபேசி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இதன்மூலம் இரு சிம்களிலும் 5ஜி இணையவேக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜூன் நான்காம் தேதி நண்பகல் 12 மணிக்கு ரியல்மி ஸ்டோர், ஃபிளிப்கார்ட் ஆகிய தளங்களில் வெளியாகிறது. அதில் இருக்கும் அம்சங்கள் பின்வருமாறு:

Realme X7 Max 5G confirmed to launch with MediaTek Dimensity 1200 SoC |  Technology News,The Indian Express

இயங்குதளம் (OS): ஆன்ட்ராய்டு 11, Realme UI 2.0

தொடுதிரை: 6.43 இன்ச் திரை, FHD+ AMOLED திரை

சிபியூ பிராஸசர்: MediaTek Dimensity 1200 chipset, ARM G77 MC9 GPU

மெமரி திறன்: 8GB RAM+128GB ROM, 12GB RAM+256GB ROM

கேமரா: முன்பக்கம் – 16MP செல்பி கேமரா, பின்பக்கம் – மூன்று கேமராக்கள் (64MP+8MP+2MP)

Realme X7 Max specifications spotted on alleged retail box image
source:91 mobiles

பேட்டரி திறன்: 4,500mAh பேட்டரி, 50W திறனுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, 16 நிமிடங்களில் 50% பேட்டரி சார்ஜ்

எடை: 179 கிராம்

இதர அம்சங்கள்: 5G இணைய வேகம், Type C சார்ஜர், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்

விலை: 8GB+128GB – ரூ.26,999 என்ற விலையிலும் 12GB+256GB – ரூ.29,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வரவிருக்கிறது. மெர்குரி சில்வர், ஆஸ்டிரய்டு பிளாக், மில்கி வே ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

5ஜி ஸ்பீடுடன் இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் - ரியல்மி வெளியிடும்  Realme X7 Max 5G!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சசிகலாவை தரக்குறைவாக பேசுவதா? நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மை எரிப்பு

சசிகலாவை தரக்குறைவாக பேசியதாகக் கூறி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உருவ பொம்மையை அமமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா?- புகழேந்தி

மணிகண்டன் ரகசியமாக குடும்பம் நடத்தியது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய...

’’ஆளும்கட்சிக்கு பிடிக்காத வசனம் இதுதான்’’

இன்று தொடங்கிய 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்...
- Advertisment -
TopTamilNews