ஜியோமிக்கு டஃப் கொடுக்கும் ரியல்மி – குறைந்த விலையில் நிறைந்த அம்சங்கள் கொண்ட 4K ஸ்மார்ட் டிவி!

 

ஜியோமிக்கு டஃப் கொடுக்கும் ரியல்மி – குறைந்த விலையில் நிறைந்த அம்சங்கள் கொண்ட 4K ஸ்மார்ட் டிவி!

ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாக இருந்த எல்இடி டிவிக்களை மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வசூல் செய்திருந்தது ஜியோமி. ஜியோமிக்கு போட்டியாக அனைத்து சாதனங்களையுஜ்ம் களமிறக்கி சமர் புரிந்து வருகிறது ரியல்மி. தற்போது 4K ஸ்மார்ட் டிவியை களமிறக்கியிருக்கிறது. Realme Smart TV 4K என்ற பெயரில் அறிமுகமாகவிருக்கும் ஸ்மார்ட் டிவி 43 மற்றும் 50 இன்ச்களில் வெளியாகிறது. Android TV 10 என்ற இயங்குதளத்தில் டிவி இயங்கும்.

ஜியோமிக்கு டஃப் கொடுக்கும் ரியல்மி – குறைந்த விலையில் நிறைந்த அம்சங்கள் கொண்ட 4K ஸ்மார்ட் டிவி!

கூகுள் பிளே ஸ்டோர் வசதி இருப்பதால் பிரபலமான செயலிகள், கேம்கள் ஆகியவற்றை டிவியில் பதிவிறக்கம் செய்யலாம். 4K சப்போர்ட் செய்வதால் யூடியூப், அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட செயலிகளில் படங்கள், சீரிஸ்களை அதிநவீன ஸ்ட்ரீமிங் உடன் கண்டுகளிக்கலாம். அதேபோல 2GB RAM+16 ROM என்ற சேமிப்பு திறன் கொண்டிருக்கிறது. நான்கு ஸ்பீக்கர்கள் இருப்பதால் டால்பி அட்மோஸ் சவுண்ட் சிஸ்டத்தில் லிவ்விங் ரூமை தெறிக்க விடும் என்று சொல்லப்படுகிறது.

ஜியோமிக்கு டஃப் கொடுக்கும் ரியல்மி – குறைந்த விலையில் நிறைந்த அம்சங்கள் கொண்ட 4K ஸ்மார்ட் டிவி!

quad-core MediaTek என்ற பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது. ரிமோட் இல்லாமல் நமது வாய்ஸ் மூலம் டிவியை இயக்கும் அம்சமும் இடம்பெற்றிருக்கிறது. 43 இன்ச் ரூ.27,999 என்ற விலையிலும் 50 இன்ச் ரூ.39,999 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த டிவியும் அதே தேதியில் அதே நேரத்தில் அதே தளங்களில் வெளியாகவுள்ளது.