ரியல்மி நார்ஸோ 10ஏ 4ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் அறிமுகம்

 

ரியல்மி நார்ஸோ 10ஏ 4ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: ரியல்மி நார்ஸோ 10ஏ 4ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி நார்ஸோ 10ஏ ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் கொண்ட வெர்ஷன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது அதன் 4ஜிபி வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 64ஜிபி மெமரியுடன் வருகிறது. ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் போன்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் நாளை முதல் (ஜூன் 23) விற்பனைக்கு கிடைக்கும். ரியல்மி நார்ஸோ 10ஏ 4ஜிபி ரேம் மாடல் விலை ரூ.9,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்களாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.5 ஹெச்.டி டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசசர், 12 எம்.பி ரியர் கேமரா செட்டப், 5 எம்.பி செல்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.