ரியல்மி நார்ஸோ 10ஏ ப்ளூ நிற வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் – நாளை முதல் விற்பனை

ரியல்மி நார்ஸோ 10ஏ 4ஜிபி ரேம் மாடலின் ப்ளூ நிற வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ரியல்மி நார்ஸோ 10ஏ 4ஜிபி ரேம் மாடலின் ப்ளூ நிற வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி நார்ஸோ 10ஏ ஸ்மார்ட்போனின் ப்ளூ நிற வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் நாளை (ஜூன் 30) நண்பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வெளியாகிறது. இது 4ஜிபி ரேம், 128ஜிபி மெமரியுடன் வருகிறது. ஃபிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் போன்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் நாளை முதல் (ஜூன் 30) விற்பனைக்கு கிடைக்கும். ரியல்மி நார்ஸோ 10ஏ 4ஜிபி ரேம் 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ.11,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதன் சிறப்பம்சங்களாக ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 6.5 ஹெச்.டி டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம், மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசசர், 12 எம்.பி ரியர் கேமரா செட்டப், 5 எம்.பி செல்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Most Popular

ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அதிரடி பறக்கும் படை அமைக்க வேண்டும் : பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அதிரடி பறக்கும் படை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு மின்னஞ்சல் வாயிலாக பால் முகவர்கள் சங்கம்...

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்...

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்!- அலறியடித்து ஓடிய மக்கள்

அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டை விட்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம்...

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில்...
Open

ttn

Close