5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் அறிமுகம்

கோலாலம்பூர்: 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி கொண்ட ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் பிரிவில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட கேமராக்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை மலேசியாவில் 429 ரிங்கிட் (தோராயமாக ரூ.7600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்ட் க்ரீன் மற்றும் பேப்பர் கிரே ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது. இப்போதைக்கு மலேசியாவில் மட்டும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் விற்பனைக்கு எப்போது வெளியாகும் என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக டுயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 10, 6.5 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35, 13 எம்.பி டுயல் ரியர் கேமரா, 5 எம்.பி செல்பி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஏ.ஐ பியூட்டி மோடு, போர்ட்ரெய்ட் மோடு, ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் இதர கனெக்டிவிட்டி அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.