‘ரியல்மி பட்ஸ் க்யூ’ இயர்பட்ஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

ரியல்மி பட்ஸ் க்யூ ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: ரியல்மி பட்ஸ் க்யூ ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி பட்ஸ் க்யூ ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ரியல்மி.காம் ஆகிய தளங்களில் இந்த இயர்பட்ஸ் மாடலை வாங்க முடியும். கடந்த மாதம் சீனாவில் ரியல்மி பட்ஸ் க்யூ இயர்பட்ஸ் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் வருகிற 25-ஆம் தேதி பிற்பகல் 12:30 மணிக்கு இந்த இயர்பட்ஸ் மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ளது. கொயட் பிளாக், கொயட் எல்லோ மற்றும் கொயட் வொயிட் ஆகிய நிறங்களில் இந்த இயர்பட்ஸ் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்துடன் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. இதன் எடை வெறும் 3.6 கிராம் மட்டுமே ஆகும். மற்ற நிறுவன இயர்பட்ஸ்களை காட்டிலும் 66 சதவீதம் அதிக பேட்டரி நீடிப்பை இது வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 20 மணிநேரம் பிளேபேக் வழங்கும் வகையில் இந்த இயர்பட்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்டெலிஜென்ட் டச் கன்ட்ரோல் அம்சம் இதில் உள்ளது. அதாவது இயர்பட்ஸ் மாடலின் பக்கவாட்டில் டபுள் டேப் செய்தால் இசையை பாஸ் மற்றும் பிளே செய்ய முடியும். அதேபோல இதே முறையில் கால் அட்டென்ட் செய்யவும் முடியும். இதில் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் அம்சம் இடம்பிடித்துள்ளது. மேலும் ப்ளூடூத் v5 உள்ளது.

Most Popular

2 மாசத்துக்கு பயன்பாட்டு மின் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பண்ணுங்க.. காங்கிரஸ் கோரிக்கை..

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு நடைபெற்று வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்கள் போல் கோவா மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், நிதி நெருக்கடியால்...

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தில் பிறந்ததால் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் வைத்த முஸ்லிம் தந்தை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வருபவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான். இவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி அன்று ஆண் குழந்தை பிறந்தது. கிருஷ்ணர் பிறந்த தினத்தில்...

நம்பிக்கை கொடுத்த பொதுத்துறை வங்கி… சென்ட்ரல் பேங்க் இந்தியா லாபம் ரூ.147 கோடியாக உயர்ந்தது…

பொதுத்துறையை சேர்ந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.147.21...

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள...
Do NOT follow this link or you will be banned from the site!