தங்கம், பங்குகளை விட ரியல் எஸ்டேட்டில் பணத்தை முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

 

தங்கம், பங்குகளை விட ரியல் எஸ்டேட்டில் பணத்தை முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்புகளின் விலை நிலவரம் மந்தமாக உள்ளது. இருப்பினும் எதில் முதலீடு செய்யலாம் என நம்மவர்கள் யோசிக்கும்போது தங்கம், பிக்சட் டெபாசிட மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை காட்டில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முன்னுரிமை கொடுப்பதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. ஹவுசிங் டாட் காம் மற்றும் நேஷனல் ரியல் எஸ்டேட் டெவல்ப்மெண்ட் கவுன்சிலும் இணைந்து, தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவல் காலத்தில், முதலீடு செய்வது தொடர்பாக மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டன.

அந்த ஆய்வின் முடிவில் யாரும் எதிர்பாராத முடிவுகள் கிடைத்தது. அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 35 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்கம், பிக்சட் டெபாசிட் மற்றும் பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். அதேசமயம் தங்கத்தில் 28 சதவீத பேரும், பிக்சட் டெபாசிட்டில் 22 சதவீத பேரும், பங்குச் சந்தைகளில் 16 சதவீத பேரும் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.

தங்கம், பங்குகளை விட ரியல் எஸ்டேட்டில் பணத்தை முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் இந்தியர்கள்

ஹவுசிங் டாட் காம் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி துருவ் அகர்வாலா இது தொடர்பாக கூறியதாவது: பணப்புழக்க கவலைகள் மற்றும் கோவிட் தொற்று தொடர்பான நிலையற்றதன்மை காரணமாக, பிளாட்களை தேடிய தகுதி வாய்ந்த வீடு வாங்குபவர்கள் தற்சமயம் அதனை நிறுத்தி வைத்துள்ளனர். இருப்பினும், வரும் மாதங்களில் அவர்கள் படிப்படியாக ரியல் எஸ்டேட் சந்தைக்கு திரும்ப தொடங்குவார்கள். பங்குச் சந்தைகளில் கடும் சரிவு மற்றும் பங்கு வர்த்தகத்தில் நிலையற்றதன்மை போன்ற காரணங்களால் ரியல் எஸ்டேட் முதலீட்டு சொத்து வகுப்பாக சிறந்த தேர்வாக மாறியதில் ஆச்சரியமில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.