ரியல்எஸ்டேட் அதிபர் படுகொலை- கூலிப்படையினர் உள்பட 5 பேர் கைது

 

ரியல்எஸ்டேட் அதிபர் படுகொலை- கூலிப்படையினர் உள்பட 5 பேர் கைது

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்கள் உள்பட 5 பேரை கைதுசெய்த போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய கூலிப்படையினரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பங்க் பாபு. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. நிர்வாகி கனகராஜ் என்பவரை வெட்டிக்கொன்ற வழக்கில் சிறையில் இருந்த பங்க்பாபு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

ரியல்எஸ்டேட் அதிபர் படுகொலை- கூலிப்படையினர் உள்பட 5 பேர் கைது

இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி அன்று வீட்டின் அருகேயுள்ள டீக்கடையில் நின்றிருந்த பங்க்பாபுவை மர்மகும்பல் ஒன்று வெட்டிக்கொலை செய்தது. கொலை சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கனகராஜ் கொலைக்கு பழிவாங்கும் விதமாக, அவரது உறவினர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து கனகராஜின் மனைவி, மாமியார் உள்ளிட்ட 3 பேரை கைதுசெய்த போலீசார், நேற்று முன்தினம் கொலையில் தொடர்புடைய திருவண்ணாமலையை சேர்ந்த வினோத்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோரை கைதுசெய்து, அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

ரியல்எஸ்டேட் அதிபர் படுகொலை- கூலிப்படையினர் உள்பட 5 பேர் கைது

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேலூரை சேர்ந்த இளைஞர்கள் கூலிப்படையாக செயல்பட்டதும், இதற்காக 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஒரு கார் பேரம் பேசப்பட்டதும் தெரியவந்தது. முன்பணமாக 30 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட கூலிப்படையினர், கொலை செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு அதேபகுதியில் தங்கியிருந்து பங்க்பாபுவை கண்காணித்து வந்ததும் தெரியவந்தது. இதனிடையே இந்த கொலையில் தொடர்புடையவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள போலீசார், அவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.