ரூ.50 கோடி மதிப்புள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர நிதியமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை!

ரூ.50 கோடி மதிப்புள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர நிதியமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊழலை ஒழிக்கிறேன் என்ற பேரில் புழக்கத்தில் இருந்த ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது எனக்கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை செய்தார். அவரது செயலுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நடவடிக்கையால் நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பொருளாதார அறிஞர்கள் கூறினர். ஆனால் இந்தியாவிற்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், அத்தனை பழைய கருப்பு நோட்டுகளையும் மீட்டுவிட்டதாக ஆளும் பாஜக அரசாங்கம் கூறி வருகிறது.

ரூ.50 கோடி மதிப்புள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை மாற்றித் தர நிதியமைச்சருக்கு திருப்பதி தேவஸ்தானம் கோரிக்கை!

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக வந்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நோட்டுகளை மாற்றித் தரும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கால், தற்போது ஒரு நாளைக்கு 12 ஆயிரத்து 500 பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் தேவஸ்தானத்திற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும், ரிசர்வ் வங்கி பழைய நோட்டுகளை மாற்றித்தந்தால் இந்த உதவிகரமாக இருக்கும் என்றும் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.