‘மக்கள் போராட்டம் நடத்துவோம்’ – இலங்கையில் 20-வது சட்டத்திருத்தம் பற்றிய எதிர்வினைகள்

 

‘மக்கள் போராட்டம் நடத்துவோம்’ – இலங்கையில்  20-வது சட்டத்திருத்தம் பற்றிய எதிர்வினைகள்

இலங்கையில் இன்றைய தேதிக்கு கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது 20-வது சட்டத்திருத்தம்.

இலங்கையில் நடந்த தேர்தலில் ராஜபக்‌ஷே கட்சியின் தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இலங்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு மடங்கு இடங்களைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தது.

மகிந்த ராஜபக்‌ஷே மீண்டும் பிரதமரானார். அவரின் சகோதரர் கோத்தபய ராஜபக்‌ஷே அதிபர் என்பது தெரிந்த விஷயமே. ராஜபக்‌ஷே குடும்பத்தின் பலருக்கும் அரசியல் அதிகாரப் பொறுப்புகள் அளிக்கப்பட்டதாக புகாரும் எழுந்தது.

‘மக்கள் போராட்டம் நடத்துவோம்’ – இலங்கையில்  20-வது சட்டத்திருத்தம் பற்றிய எதிர்வினைகள்

இலங்கையின் 19- வது சட்டத்திருத்ததை நீக்கி, 20-வது சட்டத் திருத்தம் செய்ய பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷே கட்சி முயற்சி மேற்கொண்டது. பெரும்பான்மை இருப்பதால் எளிதாக இது சாத்தியம்தான் என்று பேசப்படுகிறது.

20-வது சட்டத்த்திருத்தம் அதிபருக்கு வானளவிய அதிகாரத்தை அளிக்கிறது என்று கூறப்படுகிறது.  நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு அதை அதிபர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம் என்றும்,  அமைச்சர் பதவியை நீக்கும் அதிகாரமும் அதிபருக்கு உண்டு போன்ற பல அதிகாரங்கள் அதிபருக்கு அளிக்கிறது இந்தச் சட்டத்திருத்தம்.

‘மக்கள் போராட்டம் நடத்துவோம்’ – இலங்கையில்  20-வது சட்டத்திருத்தம் பற்றிய எதிர்வினைகள்

இலங்கையின் ஊடக அமைப்புகள் கூட்டாக இணைந்து விடப்பட்டிருக்கும் அறிக்கையில், 20 வது திருத்தத்தில் உள்ள சில பிரிவுகள் இலங்கையில் கருத்து வெளிபடுத்தும் சுதந்திரத்திற்கு பெரும் தீமை செய்வதாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா 20 வது திருத்தம் பற்றி பேசுகையில், ’ஆளும் தரப்பே ஆளுங்கட்சி உறுப்பினர்களை அழிக்கும் நடக்கிறது; என்று விளக்கி, இந்தத் திருத்தத்தால் உலகநாடுகள் மத்தியில் இலங்கை வெறுப்பையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

‘மக்கள் போராட்டம் நடத்துவோம்’ – இலங்கையில்  20-வது சட்டத்திருத்தம் பற்றிய எதிர்வினைகள்

20-வது சட்டத்திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, 20 வது திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம். மக்களைத் திரட்டி போராட்டங்களிலும் ஈடுபடுவோம்’ என்று கூறியிருக்கிறார்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பேசுகையில், ’20 வது சட்டத்திருத்தம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால், இலங்கையை ஜனநாயக நாடுகள் புறக்கணிக்கும்’ என்று எச்சரிக்கிறார்.

இன்னும் பலரும் 20-வது திருத்தம் குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது இலங்கையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.