அண்ணாவை முதல்வராக்கிய ‘அந்த’ அஸ்திரம்… கலைஞரின் கைகூடாத கனவு – ஸ்டாலினால் பலிக்குமா?

 

அண்ணாவை முதல்வராக்கிய ‘அந்த’ அஸ்திரம்… கலைஞரின் கைகூடாத கனவு – ஸ்டாலினால் பலிக்குமா?

திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதுபோல தேர்தல் களத்தின் கதாநாயகனான தேர்தல் அறிக்கை இன்று வெளியாகி தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது. உண்மையிலேயே அவர் சொன்னது போல இன்றைய நாளின் கதாநாயகனாகவே வாக்குறுதிகள் இருக்கிறது. ஒருவேளை அவர் ஆட்சிக்கு வந்த பின் அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால் அடுத்த தேர்தலிலும் அவர் தான் கதாநாயகன். வாக்குறுதிகளில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று சட்ட மேலவை மீட்டுருவாக்கம் செய்யப்படும் என்பதே.

அண்ணாவை முதல்வராக்கிய ‘அந்த’ அஸ்திரம்… கலைஞரின் கைகூடாத கனவு – ஸ்டாலினால் பலிக்குமா?
அண்ணாவை முதல்வராக்கிய ‘அந்த’ அஸ்திரம்… கலைஞரின் கைகூடாத கனவு – ஸ்டாலினால் பலிக்குமா?

அண்ணாவின் முதல்வர் பதவியை உறுதிசெய்த சட்ட மேலவை

1967ஆம் ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்தபோது அண்ணா அத்தேர்தலில் போட்டியிடவில்லை. அண்ணா முதல்வராகப் பதவியேற்றாலும் அடுத்த ஆறு மாதத்திற்குள் சட்டப்பேரவையின் இரு அவைகளில் ஒன்றில் உறுப்பினராக வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறியது. அதற்குப் பின்னரே சென்னை மாநகராட்சி தொகுதியில் போட்டியிட்டு சட்ட மேலவை உறுப்பினரானார் (எம்எல்சி) அண்ணா. திமுகவின் முதல் முதல்வரே சட்ட மேலவையால் அருளப்பட்டவரே.

அண்ணாவை முதல்வராக்கிய ‘அந்த’ அஸ்திரம்… கலைஞரின் கைகூடாத கனவு – ஸ்டாலினால் பலிக்குமா?

எம்ஜிஆரின் கோபமும் மேலவை கலைப்பும்

இப்படியாகப்பட்ட பாரம்பரியம் கொண்ட சட்ட மேலவையைக் கலைத்தது அண்ணாவின் தொண்டன் என சொல்லிக்கொண்ட எம்ஜிஆர். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் திமுகவில் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட முதல் கௌரவமே எம்எல்சி பதவிதான். சட்ட மேலவையைக் கலைத்ததற்கான காரணம் தான் விசித்திரமானதாக இருக்கிறது. வெண்ணிற ஆடை நிர்மலாவை சட்ட மேலவை உறுப்பினராக்க முயன்றார். அப்போது அவர் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் நியமனத்திற்குத் தடங்கல் ஏற்பட்டது.
எம்ஜிஆர் அவரின் கடனை அடைத்து கடும் சட்டப்போராட்டத்துக்குப் பிறகு நியமனம் செல்லும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்ணாவை முதல்வராக்கிய ‘அந்த’ அஸ்திரம்… கலைஞரின் கைகூடாத கனவு – ஸ்டாலினால் பலிக்குமா?

இதையெல்லாம் யாருக்காக செய்தாரோ அவரே வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இது ஒரு பக்கம் அவருக்கு கோபத்தை எழுப்ப, அப்போதைய ஆளுநரோ சுந்தர் லால் குராணா எம்ஜிஆரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் கேட்க கடுங்கோபத்திற்கு ஆளானார். இறுதியாக சட்ட மேலவையைக் கலைக்கும் முடிவில் இறங்கி சட்ட கீழவையில் 1986ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தார். அங்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்க நவம்பர் 1ஆம் தேதி கலைக்கப்பட்டது.

அண்ணாவை முதல்வராக்கிய ‘அந்த’ அஸ்திரம்… கலைஞரின் கைகூடாத கனவு – ஸ்டாலினால் பலிக்குமா?

ஜெயலலிதாவின் சித்து விளையாட்டுகள்

அப்போதிருந்தே கடும் பிரயத்தனங்களை முன்னாள் திமுக தலைவர் கலைஞர் எடுத்துவந்தார். ஆனால் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்தன. இப்படி சொல்வதைக் காட்டிலும் அவை அவ்வாறு செய்யப்பட்டன என்று கூறுவதே உண்மைக்கு நெருக்கமானதாக இருக்கும். ஆம் கருணாநிதியின் முயற்சிகளை முடித்துவைத்தது சாட்சாத் ஜெயலலிதா தான். 1989ஆம் ஆண்டிலிருந்து கருணாநிதி சட்ட மேலவையைக் கொண்டுவர தீர்மானம் கொண்டுவருவதும், அதனை அடுத்து ஆட்சியில் வரும் ஜெயலலிதா ரத்து செய்வதுமே அரசியல் சித்து விளையாட்டாக அரங்கேறிக் கொண்டிருந்தது.

கருணாநிதியின் கைகூடாத கனவு

நடுவே கொஞ்சம் இடைவெளி விட்ட கருணாநிதி 2006ஆம் ஆண்டு மீண்டும் புத்துயிர் பாய்ச்சினார். ஆட்சி மற்றும் முதல்வர் பதவியின் அந்திம காலத்தில் இருந்த கருணாநிதி 2010ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். மத்தியில் திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இருந்ததால், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. குடியரசு தலைவரும் ஒப்புதல் அளிக்க சட்ட மேலவை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற வழக்கம் போலவே கைவிடப்பட்டது.

அண்ணாவை முதல்வராக்கிய ‘அந்த’ அஸ்திரம்… கலைஞரின் கைகூடாத கனவு – ஸ்டாலினால் பலிக்குமா?

அப்பாவின் கனவை நிறைவேற்றுவாரா மகன்?

2016ஆம் ஆண்டில் வெளியான தேர்தல் அறிக்கையிலும் சட்ட மேலவை மீட்டுருவாக்கம் செய்யப்படும் என கருணாநிதி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஆட்சியும் கைகூடவில்லை. கருணாநிதியின் கனவும் கைகூடவில்லை. தற்போது ஸ்டாலின் சட்ட மேலவை அஸ்திரத்தைக் கையிலெடுத்துள்ளார்.

தனது அப்பாவின் கனவை பலிக்க வைப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சட்ட மேலவையின் அதிகாரங்கள், அதன் தேவைகள், அதன் அமைப்பு உள்ளிட்டவற்றை இன்னொரு செய்தியில் காணலாம்!