“கோயில்களை திறந்தால் மக்களை கட்டுப்படுத்த முடியாது” அமைச்சர் சேகர் பாபு

 

“கோயில்களை திறந்தால் மக்களை கட்டுப்படுத்த முடியாது” அமைச்சர் சேகர் பாபு

இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

“கோயில்களை திறந்தால் மக்களை கட்டுப்படுத்த முடியாது” அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு திருவிழாக்கள் கட்டுப்பாடுகளுடன் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெறும் சூழல் ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த மாதம் முதல் பிறப்பிக்கப்பட்டு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கு வருகின்ற 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் ஊரடங்கு தளர்வுகளுடன் நீடிப்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் பேருந்து சேவை, கோயில்கள் திறப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

“கோயில்களை திறந்தால் மக்களை கட்டுப்படுத்த முடியாது” அமைச்சர் சேகர் பாபு

இந்நிலையில் கோயில் தொடர்பான கோரிக்கைகளை பக்தர்கள் பொதுமக்கள் சிறப்பு குறை கேட்கும் மையம் துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் மையத்தை அமைச்சர் சேகர் பாபு திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவல் குறைந்து வருகிறது; ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படுவதில் கோவில்கள் திறப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் கோயில்களை திறந்தால் மக்களை கட்டுப்படுத்த முடியாது.டாஸ்மாக் பொதுவெளியில் உள்ளதால் காவல்துறை மூலம் கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியும் என்றார். திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை 044-2833999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கோரிக்கைகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 044-2833999 என்ற எண்ணில் கூறலாம் என்று கூறியுள்ளார்.