தேர்தல் விதிமீறல்.. மறு வாக்குப்பதிவு நடத்த முடிவா?

 

தேர்தல் விதிமீறல்.. மறு வாக்குப்பதிவு நடத்த முடிவா?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அன்று இரவு வேளச்சேரி வாக்குச்சாவடியில் இருந்து 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது. அவை பயன்படுத்தப்படாத மற்றும் பழுதான இயந்திரங்கள் என அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தேர்தல் விதிமீறல்.. மறு வாக்குப்பதிவு நடத்த முடிவா?

இந்த நிலையில், வேளச்சேரியில் ஸ்கூட்டரில் எடுத்துச்செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஸ்கூட்டரில் எடுத்துச்சென்ற விவிபேட் இயந்திரம் 50 நிமிடங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் 200 வாக்குகள் வரை இருந்த நிலையில் 15 வாக்குகள் மட்டும் பதிவாகி இருந்தது. 10 நிமிடங்கள் பயன்படுத்த பின்னர் இயந்திரம் பழுதாகியுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் விதிமீறல்.. மறு வாக்குப்பதிவு நடத்த முடிவா?

மேலும் இயந்திரத்தை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றது விதிமீறல் தான் என்று கூறிய தெரிவித்த தலைமை தேர்தல் அதிகாரி, வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதால் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.