• December
    10
    Tuesday

Main Area

Main



அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவன பங்கு விலை 59 பைசா! பரிதாபத்தில் முதலீட்டாளர்கள்

அனில் அம்பானி
அனில் அம்பானி

ஒரு காலத்தில் நம் நாட்டின் முன்னணி கோடீஸ்வரராக விளங்கிய அனில் அம்பானியின் நிலைமை தற்போது பரிதாபமான நிலையில் உள்ளது. அவரது தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடுமையான கடன் சுமையால் தள்ளாடி வருகிறது. மேலும் அந்நிறுவனம் தற்போது திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.30,142 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. சட்டரீதியான தவணைகள் (சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரம்) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பொறுப்புகளுக்காக ரூ.28,314 கோடி ஒதுக்கியதே இதற்கு காரணம். அந்நிறுவனத்தின் மொத்த பொறுப்பில் உரிம கட்டணம் (ரூ.23,327 கோடி), அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் (ரூ.4,987 கோடி) உள்ளிட்டவையும் அடங்கும்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்

2018 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.1,141 கோடி லாபம் சம்பாதித்து இருந்தது. 2019 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.302 கோடியாக குறைந்தது. 2018 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.977 கோடியாக இருந்தது.

பங்கு விலை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் பல மாதங்களாக அதன் பங்கின் விலை தொடர் சரிவை சந்தித்து வந்தது. 1 ரூபாய்க்கும் கீழ் அந்நிறுவனத்தின் பங்கின் விலை சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 59 காசுகளாக குறைந்தது. 

2018 TopTamilNews. All rights reserved.