RCBvsMI : இரண்டு அணிக்கும் தேவை ஒரு வெற்றி – ஜெயிக்கப் போவது யாரு ?

 

RCBvsMI : இரண்டு அணிக்கும் தேவை ஒரு வெற்றி – ஜெயிக்கப் போவது யாரு ?

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.

வெற்றி பெற வேண்டிய கட்டாயம் 

12-ஆவது சீசன் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று 7-ஆவது லீக் போட்டி நடைபெற இருக்கிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோத இருக்கின்றன. இந்த இரு அணிகளும் தங்களது முதல் லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

RCBvsMI

நம்பிக்கை நட்சத்திரங்கள் 

மும்பை அணியில் ரோகித் சர்மா, டி காக், பாண்ட்யா பிரதர்ஸ் இன்று நன்றாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சென்ற போட்டியில் அரை சதம் அடித்த யுவராஜ் சிங் இன்றைய போட்டியிலும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் காயம் காரணமாக பேட்டிங் செய்யாத பும்ரா உடல் தகுதி எட்டிவிட்டதால் இன்று விளையாட வாய்ப்பிருக்கிறது.

அதே போல், பெங்களூரு அணியில், கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மேயர் பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. பந்து வீச்சைப் பொறுத்தவரை சாஹல், உமேஷ் யாதவ் நம்பிக்கை தருகின்றனர். 

RCBvsMI

ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 23 முறை மோதியுள்ளன. இதில், பெங்களூரு 9 முறையும், மும்பை 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனும், துணை கேப்டனும் ஐபிஎல் தொடரில் தங்கள் அணிகளுக்காக முதல் போட்டியில் விளையாட உள்ளனர். இருவருமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இதையும் படிங்க 

கிரிக்கெட் விளையாட்டில் நாகரீகம் வேண்டும் – அஸ்வினுக்கு பிசிசிஐ குட்டு

சேப்பாக்கத்தில் 1200, சௌகார்பேட்டையில் 6000 – ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு