ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

 

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, நான்கு சதவிகிதமாகவே தொடரும் என்று ரிவர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “இந்தியாவில் கொரோனாத் தொற்று காரணமாக பொது முடக்க அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் – மே மாதம் முதல் மேம்படத் தொடங்கியுள்ளது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ஏற்கனவே உள்ள ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் தொடரும். ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.3 சதவிகிதமாக நீடிக்கும். தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரெப்போ விகிதத்தில் 10 ஆயிரம் கோடி கூடுதல் நிதி வழங்கப்படும்.
உலக மைய வங்கிகளில் அவசர கால செயல்பாடுகளில் சிறப்பு குவாரன்டைன் வசதியை தொடர்ந்து வழங்கிய ஒரே வங்கி இந்திய ரிசரவ் வங்கிதான். உலக அளவில் 2020ம் ஆண்டின் முதல் பாதியில் பொருளாதார நடவடிக்கைகள் பலவீனமாகவே உள்ளன” என்றார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு இஎம்ஐ தவணை கட்ட ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. பொருளாதார நிலை மேம்படவில்லை. வேலை இழப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் பொது மக்களுக்கான புதிய அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.