வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு இன்ப செய்தி… மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய ஆர்பிஐ!

 

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு இன்ப செய்தி… மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய ஆர்பிஐ!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனால் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தாமல் அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்துகின்றன. பல மாநிலங்களில் சிறு சிறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மீண்டும் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இத்தகைய பரபரப்பான சூழலில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது.

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு இன்ப செய்தி… மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய ஆர்பிஐ!

இக்கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆளுநர், வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு Restructuring என்ற முறையை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின்படி கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தைக் கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். உதாரணமாக 10 லட்சத்திற்குக் கடன் வாங்கி 4 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் ஈஎம்ஐ கட்டுபவர்கள் இம்முறையைப் பயன்படுத்தி அதனை 6 ஆண்டுகளாக நீட்டித்து மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஈஎம்ஐ கட்டிக்கொள்ளலாம்.

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு இன்ப செய்தி… மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய ஆர்பிஐ!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடன் வாங்குபவர்களுக்கும் கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கும் நல்ல பலனைப் பெற்றுத் தந்தது. அதேபோல மொரட்டோரியம் என்றழைக்கப்படும் ஈஎம்ஐ விலக்கு ஆறு மாதங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இதனைப் பயன்படுத்தி ஆறு மாதத்திற்கு ஈஎம்ஐ-லிருந்து விலக்கு பெற்றனர். மொரட்டோரியம் பயன்படுத்திய பலரும் restructuring முறையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு இன்ப செய்தி… மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிய ஆர்பிஐ!

அவர்கள் தற்போது அறிவித்திருக்கும் restructuring முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரிசவ் வங்கி தெரிவித்துள்ளது. 25 கோடி ரூபாய்க்குக் கீழே கடன் வாங்கிய சிறு, குறு தொழில் முனைவோர்கள் இதன்மூலம் பயன்பெற்றுக் கொள்ளலாம். 25 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த முடியாது. 2021 செப்டம்பம் 30ஆம் தேதிக்குள் இம்முறையைப் பயன்படுத்த கடன் வாங்கியவர்களுக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி முடிவு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் வங்கிகளுக்கு நல்ல லாபம் வரும். அதே சமயத்தில் கடன் வாங்கியவர்களுக்கும் நெருக்கடி இல்லாமல் இருக்கும் என்று அவதானிக்கப்படுகிறது.