ரெப்போ வட்டி வீதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அதிரடி!

 

ரெப்போ வட்டி வீதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அதிரடி!

ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தை நடத்துவது வழக்கம். பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆளுநர் சக்தி காந்ததாஸ், உறுப்பினர்கள் அஷிமா கோயல், ஜெயந்த் ஆர் வர்மா, ஷசான்கா பிடே ஆகியோர் கலந்தாலோசித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சக்தி காந்ததாஸ் இன்று வெளியிட்டார்.

ரெப்போ வட்டி வீதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அதிரடி!

வெளியிடப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி வீதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதுள்ள 4 சதவீதம் என்ற அளவிலேயே வட்டி வீதம் தொடர்கிறது. அதேபோல வங்கிகள் டெபாசிட்களை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் தொகைக்கான வட்டியான ரிவர்ஸ் ரெப்போ ரேட் தொடர்ந்து 3.35 சதவீதம் அளவிலேயே இருக்கும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் 115 புள்ளிகளை வட்டியில் குறைத்தாலும் கடந்த எட்டு மாதங்களாக வட்டிக்குறைப்பு மேற்கொள்ளப்படவில்லை.

2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம் அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் இனி மேல்நோக்கிய வளர்ச்சிப் பாதையில்தான் செல்லும்.

ரெப்போ வட்டி வீதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அதிரடி!

நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதம் அளவில் இருக்கும். நிதிப் பற்றாக்குறையின் அதிகபட்ச அளவு 6 சதவீதம்தான் இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவலில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் பற்றாக்குறை 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்கம் சராசரியாக 5 சதவீதம் இருக்கும். மூன்றாவது காலாண்டில் 4.3 சதவீமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.