வங்கி கடன் பெறுபவர்களுக்கு இனிய செய்தி… ரிசர்வ் வங்கியின் அசத்தலான முடிவு!

 

வங்கி கடன் பெறுபவர்களுக்கு இனிய செய்தி… ரிசர்வ் வங்கியின் அசத்தலான முடிவு!

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இதன்மூலம் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்திலேயே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களும் அவசியமான ஒன்று.

வங்கி கடன் பெறுபவர்களுக்கு இனிய செய்தி… ரிசர்வ் வங்கியின் அசத்தலான முடிவு!

ரெப்போ வட்டி விகிதம் என்றால் ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம். இந்த விகிதம் குறையும் பட்சத்தில் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் குறைவான வட்டி விகிதத்தையே விதிக்கும். ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தை நடத்துவது வழக்கம். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கூட்டத்திலும் ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. போலவே இம்மாதம் இன்று நடைபெற்ற கூட்டத்திலும் இதே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வங்கி கடன் பெறுபவர்களுக்கு இனிய செய்தி… ரிசர்வ் வங்கியின் அசத்தலான முடிவு!

வெளியிடப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

வங்கிகள் டெபாசிட்களை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் தொகைக்கான வட்டியான ரிவர்ஸ் ரெப்போ ரேட் தொடர்ந்து 3.35 சதவீதம் அளவிலேயே இருக்கும்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் 115 புள்ளிகளை வட்டியில் குறைத்தாலும் கடந்த எட்டு மாதங்களாக வட்டிக்குறைப்பு மேற்கொள்ளப்படவில்லை.

2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம் அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் இனி மேல்நோக்கிய வளர்ச்சிப் பாதையில்தான் செல்லும்.

வங்கி கடன் பெறுபவர்களுக்கு இனிய செய்தி… ரிசர்வ் வங்கியின் அசத்தலான முடிவு!

நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதம் அளவில் இருக்கும். நிதிப் பற்றாக்குறையின் அதிகபட்ச அளவு 6 சதவீதம்தான் இருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவலில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் பற்றாக்குறை 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் பணவீக்கம் சராசரியாக 5 சதவீதம் இருக்கும். மூன்றாவது காலாண்டில் 4.4 சதவீமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.