வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் – சக்தி காந்ததாஸ்

 

வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் – சக்தி காந்ததாஸ்

டெல்லி: வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ரெப்போ வட்டி விகிதத்தில் 0.40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வகையில் தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வங்கி கடன் தவணைகளை செலுத்த கூடுதலாக 3 மாத காலம் அவகாசம் – சக்தி காந்ததாஸ்

இந்த குறைக்கப்பட்ட வட்டியின்படி வங்கிகள் கடன் வழங்கும் என சக்தி காந்ததாஸ் தெரிவித்தார். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை இந்த பேட்டியின்போது அவர் அறிவித்தார். அதேபோல மத்திய வங்கி தலைகீழ் ரெப்போ விகிதத்தை 3.35 சதவீதமாக குறைத்துள்ளதாக அவர் கூறினார்.

முன்னதாக கடந்த மார்ச் 27 அன்று, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் 75 புள்ளிகள் குறைத்தது. ஏப்ரல் மாதத்தில், மத்திய வங்கி தலைகீழ் ரெப்போ வீதத்தை 3.75% ஆக குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.