ஐடி செலவுகளை அதிகப்படுத்துங்கள்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுரை!

 

ஐடி செலவுகளை அதிகப்படுத்துங்கள்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுரை!

ஐடி சேவைகளை மேம்படுத்த வங்கிகள் அதிக முதலீடு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். முன்னணி வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, புதிதாக கிரெடிட் கார்டு உள்ளிட்ட மின்னணு சேவைகளை அளிக்க ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. அந்த வங்கியின் மின்னணு சேவைகளில் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டதால் புதிய கிரெடிட் கார்டு வழங்குவது உள்ளிட்ட மின்னணு சேவைகளை தொடங்குவதற்கு தடை விதித்துள்ளது. அதுபோல எஸ்பிஐ வங்கியின் யோனோ செயலி சேவைகளுக்கும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஐடி செலவுகளை அதிகப்படுத்துங்கள்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுரை!

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், வங்கிச் சேவைகளில் ஐடி துறையை மேம்படுத்தும் கட்டாயத்தில் இந்திய வங்கிகள் உள்ளன என தெரிவித்தார். ஹெச்டிஎஃப்சி வங்கி சேவைக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து பேசுகையில். அந்த வங்கியின் மின்னணு சேவைகளில் தொடர்ச்சியாக கோளாறுகள் ஏற்பட்டதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். கடந்தகால செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் சக்திகாந்த தாஸ் கூறினார்.

ஐடி செலவுகளை அதிகப்படுத்துங்கள்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவுரை!

லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கி சேவையில் மின்னணு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில மணி நேர தடங்கல்கள் , மிகப்பெரிய சேவை இழப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். வரும் காலங்களில் வங்கி சேவைகளில் தகவல் தொழில்நுட்பங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறிய அவர், இந்திய வங்கிகள் தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கு அதிக முதலீடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். மக்களின் நம்பிக்கைகளையும் பெறுவதற்கும், சேவைகளை அளிப்பதற்கும் மின்னணு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது அவசியம் என்றும் சக்திகாந்த தாஸ்