முதல்வரும், துணை முதல்வரும் ராமர் லட்சுமணன் போன்று உள்ளனர்: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

 

முதல்வரும், துணை முதல்வரும் ராமர் லட்சுமணன் போன்று உள்ளனர்: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள காந்தியடிகளின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கதர் ஆடை விற்பனையை துவக்கி வைத்தார்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்பி. உதயகுமார், “திமுகவிற்கு மக்களிடம் எடுத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. திமுக காலி பானையாக உள்ளது. அதிமுகவில் ஆரோக்கியமான கருத்து ஒற்றுமை ஏற்பட்டு தேர்தலை சந்திப்போம். வரும் 7ம் தேதி ஒருமித்த கருத்தோடு நல்ல தீர்ப்பை அறிவிப்பார்கள். முதல்வர் துணை முதல்வருக்குமிடையே எந்தவித சர்ச்சையும் இல்லை. ஒருதாய் பிள்ளையாகவும் ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள் வரும் 7ம் தேதி தலைமை அறிவிக்கும் கருத்துக்கு ஒன்றரை கோடி தொண்டர்களும் கட்டுப்படுவார்கள். தனி ஒருவர் சொல்லும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாது.

முதல்வரும், துணை முதல்வரும் ராமர் லட்சுமணன் போன்று உள்ளனர்: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

கிராம சபை கூட்டம் நடத்துவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதில் பல்வேறு சவால்கள் இருந்ததால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டம் நடத்த கள நிலவரம் சாதகமாக அமையவில்லை என்பதால் கிராம சபை கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த காலங்களில் கிராம சபை கூட்டம் முறையாக நடத்தப்படும். கிராம சபை கூட்டம் ரத்து விவகாரத்தில் அரசியல் சாயம் பூசுவது நியாயமல்ல . எதிர்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக கிராம சபை கூட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்” எனக் கூறினார்.