இருகரம் கூப்பி பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்! தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்- அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

 

இருகரம் கூப்பி பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்! தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்- அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

இளைய சமுதாயத்தை இருகரம் கூப்பி பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறோம் தற்கொலை முயற்சியை கைவிடுங்கள் என அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், “தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம். வாழ்க்கையே நீட் தேர்வு தான் என்று மாணவர்கள் அச்சம் கொள்ளக்கூடாது. மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற பூர்ணசுந்தரி மாணவி ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். முடிந்தால் முடியாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை. நம்பிக்கையை வாழ்க்கையில் கையில் எடுத்தால் வெற்றி நம் கண்முன் நிற்கும், மனித வாழ்க்கை என்பது பல்வேறு சவால்கள் நிறைந்தது. உயிர் கடவுளால் கொடுக்கப்பட்ட கொடை. இதை பேணி பாதுகாப்பதற்கு தான் உரிமை இருக்கிறது தவிர அதை மாய்த்துக்கொள்ள உரிமை கிடையாது. இப்படிப்பட்ட துயர சம்பவங்கள் இனி தமிழகத்தில் நடைபெறக் கூடாது என்று இறைவனை வேண்டுகிறோம்.

இருகரம் கூப்பி பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்! தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்- அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

இளைய சமுதாயத்தை இருகரம் கூப்பி பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறோம் இதுபோன்ற தற்கொலை முடிவினை கைவிட வேண்டும். பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இடையே ஒரு விதமான எதிர்பார்ப்பு இருக்கும் என்று அச்சம் கொள்ள தேவையில்லை. பல முறை தோல்வி அடைந்தவர்கள் அதை அனுபவமாக எடுத்துக்கொண்டு சிகரத்தை தொட்டு உள்ளார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். மாணவ சமுதாயம் தான் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்கள் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது” எனக் கூறினார்.