வல்லரசு நாடுகளில் கூட மழை நீர் தேங்கிய பின்னர்தான் வெளியேறும்- அமைச்சர் ஆர்பி உதயகுமார்

 

வல்லரசு நாடுகளில் கூட மழை நீர் தேங்கிய பின்னர்தான் வெளியேறும்- அமைச்சர் ஆர்பி உதயகுமார்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “எந்த கட்சியும் சிந்திக்காத நிலையில் முதல்வர் தான் ஒரு அரசு பள்ளியில் பயின்ற மாணவன் என்ற அடிப்படையில் சமூக நீதி காவலராக இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக திகழும் முதல்வருக்கு இன்று முதல் சமூகநீதிக் காவலர் என்ற பட்டத்தைக் அம்மா பேரவை சூட்டுகிறது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்க பாடுபட்டதற்கு கழக அம்மா பேரவை சார்பில் நன்றி. மேடையில் வசனம் பேசும் தலைவர்கள் மத்தியில் செயல் வீரராக முதல்வர் திகழ்கிறார். நீட் இட ஒதுக்கீடு மூலம் முதல்வர் மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளார் . நீட் உள் ஒதுக்கீடு குறித்து முக. ஸ்டாலின் பொது மேடைகளில் பேசியிருக்கலாம், சட்டமன்றத்தில் தனி தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கலாம், அறிக்கை வெளியிட்டிருக்கலாம் ஆனால் எதையுமே செய்யவில்லை. அறிக்கை நாயகனாகவும் வாய்ச்சொல் வீரராக இருந்து வரும் முக.ஸ்டாலின் நீட் இட ஒதுக்கீடு விவகாரத்தில் வாய்ச்சொல் நாயகனாக மட்டுமே இருந்துள்ளார். சொல், அம்புகளை தொடுக்கும் பாய்ச்சல் வீரர்களுக்கு மத்தியில் முதல்வர் செயல் வீரராக முதல்வர் காட்சியளிக்கிறார்.

வல்லரசு நாடுகளில் கூட மழை நீர் தேங்கிய பின்னர்தான் வெளியேறும்- அமைச்சர் ஆர்பி உதயகுமார்

இட ஒதுக்கீடு என்ற குழந்தையை பெற்றெடுத்தது அதிமுக அரசு ஆனால் குழந்தைக்கு பெயர் சூட்ட முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். வல்லரசு நாடுகளில் கூட மழை நீர் சற்று நேரம் தேங்கிய பின்னர்தான் வெளியேறும். சென்னையில் வெள்ள தனிப்பு நடவடிக்கைக்கு நிதி ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக சென்னையில் வெள்ள பாதிப்பு இடம் ஆயிரத்திலிருந்து 100ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வரலாறு தெரியாமல் முக.ஸ்டாலின் சென்னை மழை நீர் தேங்கியது குறித்து பேசி வருகிறார். ஆளும் கட்சி மீது குற்றம் குறை சொல்வதற்கே எதிர்க்கட்சி தனி ஏஜென்சி வைத்துள்ளார். ரஜினி ஒரு நல்ல மனிதர், அவர் மீதான விவாதத்திற்கு ரஜினிதான் முற்றுப்புள்ளி. திமுக இந்து விரோத சக்தியாக செயல்படுகிறது. திமுக எப்பொழுதுமே மக்கள் நலத்தில் அக்கறை கொள்ளாது, குடும்ப நலத்தில் மட்டுமே அக்கறை செலுத்தும்” எனக் கூறினார்.