ஜெயலலிதாவுக்காக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கட்டிய கோயில் நாளை மறுநாள் திறப்பு

 

ஜெயலலிதாவுக்காக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கட்டிய கோயில் நாளை மறுநாள் திறப்பு

மதுரை டி. குன்னத்தூர் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர். பி உதயகுமார், “ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றி வருகிறார் தமிழக முதல்வர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் நினைவு கோவிலை திறந்து வைப்பதற்காக நாளை மறுநாள் முதல்வர்,துணை முதல்வர் மற்றும் அனைத்து அமைச்சர்களும் மதுரைக்கு வருகை தர உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 30-ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் நினைவு கோவிலை முதல்வர் மற்றும் துணை முதல்வர் திறந்து வைக்க உள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு 120 பசுக்கள் மற்றும் கன்றுகுட்டிகள் வழங்கப்பட உள்ளது.

ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் தமிழர் குலசாமி , வாழும் தெய்வம் என தொண்டர்களால் அழைக்கப்பட்டார். எங்களை முதல்வரும் , துணை முதல்வரும் சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். திருமணமாகும் பெண் பிள்ளைகளுக்கு ஏற்கனவே வழங்கிய 4 கிராம் தங்கத்தை 8 கிராம் தங்கமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டை பாரத பிரதமர் பாராட்டி உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியது போல் தான் மறைந்த பின்னரும் அதிமுக 100 ஆண்டுகள் ஆட்சி செய்யும்.

ஜெயலலிதாவுக்காக அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கட்டிய கோயில் நாளை மறுநாள் திறப்பு

எதிர்க்கட்சித் தலைவர் தினசரி ஆயிரமாயிரம் அறிக்கைகள் மூலம் நம்மை வசை பாடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் தனது கடமை பொறுப்பை மறந்து ஆளும் அரசை வசை பாடுவதை மட்டுமே தனது வாடிக்கையாக வைத்துள்ளார். எதிர்க்கட்சி சமூக ஊடகங்கள் வாயிலாக நடத்தும் பொய் பிரச்சாரத்தை தோலுரித்து நாம் உண்மையையும் நியாயத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த கோவில் வழிபாட்டுக்கான கோயிலாக மட்டுமே இல்லாமல் இளைஞர்கள் இளம் பெண்களுக்கு போட்டித்தேர்வுகள், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் பயிற்சி மையமாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் தினசரி ஆயிரமாயிரம் அறிக்கைகள் மூலம் நம்மை வசை பாடுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் தனது கடமை பொறுப்பை மறந்து ஆளும் அரசை வசை பாடுவது மட்டுமே தனது வாடிக்கையாக வைத்துள்ளார். எதிர்க்கட்சி சமூக ஊடகங்கள் வாயிலாக நடத்தும் பொய் பிரச்சாரத்தை தோலுரித்து நாம் உண்மையையும் நியாயத்தையும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த கோவில் வழிபாட்டுக்கான கோயிலாக மட்டுமே இல்லாமல் இளைஞர்கள் இளம் பெண்களுக்கு போட்டித்தேர்வுகள் திறன் மேம்பாடு உள்ளிட்ட வற்றை மேம்படுத்தும் பயிற்சி மையமாக இந்த உலகம் செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயரில் பல ஏழைம் எளிய மாணவர்களுக்கு பல்வேறு வகையிலான பயிற்சிகளை வழங்கி அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்த வளாகத்தில் அத்திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பயன் பெற்ற மகனை கடவுளாக நினைக்கும் அனைவரும் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என ஒரு ஆலயம் அமைத்து கொடுக்க வேண்டும் என நான் நினைத்தேன் அவர்களால் பெற்ற உதவியால் வாழ்நாள் முழுவதும் அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எந்த விஷயமாக இருந்தாலும் மதுரை எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் இந்த திருக்கோயிலும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்” எனக் கூறினார்.