“முதல்வரும், துணை முதல்வரும் ஒரே காரில் 5 மணி நேரம் பயணம்; அப்பறம் எங்க பிளவு?”

 

“முதல்வரும், துணை முதல்வரும் ஒரே காரில் 5 மணி நேரம் பயணம்; அப்பறம் எங்க பிளவு?”

மதுரை மாவட்டம் சோழவந்தானில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “எதிர்கட்சி தலைவர் மக்கள் சபை கூட்டம் என்ற பெயரில் மக்களைச் சந்திக்கிறோம் என்ற போர்வையில் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் கட்சியினரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின் அதனை கட்சிக்கூட்டம் என அறிவித்து விடலாம். எதிர்க்கட்சி தலைவர் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சந்தர்ப்பத்தை தேடி வருகிறார். தமிழகத்தில் அவர் எந்த குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. அதிமுக இரண்டாக உடையும் என எல்லோரும் கனவு காணுகின்றனர். அனைவரின் கனவும் கானல் நீராகிவிடும்.

“முதல்வரும், துணை முதல்வரும் ஒரே காரில் 5 மணி நேரம் பயணம்; அப்பறம் எங்க பிளவு?”

முதல்வரும் துணை முதல்வரும் ஒரே காரில் சுமார் 5 மணி நேரம் பயணித்துள்ளார்கள். அதிமுகவில் பிளவு ஏற்படும் என பொய்யான அவதூறுகளை பரப்புவதால் முதல்வரும் துணை முதல்வரும் ஒன்றாக பயணம் செய்து, ஒன்றாக பிரச்சாரம் செய்து ஒன்றாக உணவருந்தி ஒன்றாக தமிழகத்தை காப்பாற்றுவோம் என்ற அடையாளத்தை பதிவு செய்துள்ளார்கள். எம்ஜிஆரின் புகைப்படத்தை மற்ற கட்சிகளும் உபயோகிப்பது குறித்த கேள்விக்கு

எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவதற்கும், உரிமை கொண்டாடுவதற்கும் எம்ஜிஆரின் கொள்கையையும் இலட்சியத்தையும் எடுத்துச் செல்வதற்கும் உரிமையாளர்கள் அதிமுகவினர் மட்டுமே. மற்றவர்கள் அவரை ரசிக்கலாம் அவரை சொந்தம் கொண்டாட அதிமுகவிற்கு மட்டுமே உரிமை உள்ளது/ கமல் ஒரு அரசியல்வாதி கிடையாது ஓய்வு நேரத்தில் வீட்டில் இருப்பதற்கு பொழுது போகாததால் அரசியலுக்கு வந்துள்ளார். பொங்கல் சிறப்பு பரிசு திட்டத்தால் முதல்வருக்கு செல்வாக்கு கிடைக்கும் போது எதிர்கட்சியினர் காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது இயல்பு” எனக் கூறினார்.