ஆசிரியர் ராஜகோபலன் விவகாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு அவசர கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்பி!

 

ஆசிரியர் ராஜகோபலன் விவகாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு அவசர கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்பி!

சென்னை கேகே நகரில் இயங்கிவரும் பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் பண்புரிந்த ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து ராஜகோபாலன் நேற்று கைது செய்யப்பட்டார். கைதான ஆசிரியரிடம் சென்னை அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இதுபோன்ற பல ஆசிரியர்கள் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்தார்.

ஆசிரியர் ராஜகோபலன் விவகாரம்… அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு அவசர கடிதம் எழுதிய ரவிக்குமார் எம்பி!

இதையடுத்து ராஜகோபாலன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை சென்னையில் உள்ள எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். அவரை ஜூன் 8ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் இந்த நடவடிக்கைகளை ஏன் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என கேள்வியெழுப்பபடுகிறது. தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் போக்சோ சட்ட விதிமுறைகள் காற்றில் பறந்துவிட்டனவா என்றும் கேட்கப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் போக்சோ விதிகளின் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என இன்று கடிதம் எழுதியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன் அந்தக் கடிதத்தையும் இணைத்துள்ளார்.