செல்போன் தயாரிப்பில் 2வது பெரிய நாடு இந்தியா…. ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி..

செல்போன் தயாரிப்பில் 2வது பெரிய நாடு இந்தியா…. ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி..

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டிவிட்டரில், சர்வதேச அளவில் செல்போன் தயாரிப்பில் 2வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி தொடர்பான கிராப்பையும் பகிர்ந்துள்ளார். அந்த டிவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சர்வதேச அளவில் செல்போன் தயாரிப்பில் 2வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

செல்போன் தயாரிப்பில் 2வது பெரிய நாடு இந்தியா…. ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி..

கடந்த 5 ஆண்டுகளில் 200க்கும் அதிகமான மொபைல் போன் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரவிசங்கர் பிரசாத் பகிர்ந்துள்ள வரைப்படத்தின்படி, 2019-20ம் நிதியாண்டில் இந்தியா 3.60 கோடி ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் 1.70 கோடி அளவுக்கே ஸ்மார்ட்போன்கள் நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகி இருந்தது. அளவு அடிப்படையில் பார்த்தால் ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி 111.76 சதவீதம் அதிகரித்துள்ளது. மதிப்பு அடிப்படையில் சென்ற நிதியாண்டில் (2019-20) ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியாகி உள்ளது.

செல்போன் தயாரிப்பில் 2வது பெரிய நாடு இந்தியா…. ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி..

ஜியோமி நிறுவனத்தின் துணை தலைவர் மனு குமார் ஜெயின் டிவிட்டரில், சூப்பர் பெருமை. இந்தியா செல்போன்களுக்கான உலகின் 2வது பெரிய தயாரிப்பு மையமாக மாறியுள்ளது. எங்களது முதல் தயாரிப்பு ஆலையை தொடங்கினோம். இன்று எங்களது செல்போன்களில் 99 சதவீதம் மேட் இன் இந்தியா, 65 சதவீத பாகங்களில் உள்நாட்டில் பெறப்பட்டது. எங்களது 35 ஆயிரம் தொழிலாளர்களில் 95 சதவீதம் பேர் பெண்கள் என பதிவு செய்து இருந்தார்.