பரூக், மெகபூபா முப்தியின் தேசவிரோத அறிக்கைகளை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? ரவி சங்கர் பிரசாத் கேள்வி…

பரூக், மெகபூபா முப்தியின் தேசவிரோத அறிக்கைகளை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? ரவி சங்கர் பிரசாத் கேள்வி…

பரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தியின் தேசவிரோத அறிக்கைகளை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? என்று மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கேள்வி கேட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி (பி.ஏ.ஜி.டி.) 370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்பதை அதன் முக்கிய நோக்கமாக அறிவித்துள்ளது. அது (பி.ஏ.ஜி.டி.) உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. தேசிய மாநாடு, பிடிபி உள்பட 10 கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. தற்போது காங்கிரசும் அதில் இணைகிறது. சட்டப்பிரிவு 370 மீட்டெடுக்க சீனாவின் உதவியை கோருவதில் பரூக் அப்துல்லாவுக்கு எந்த தயக்கமும் இல்லை.

பரூக், மெகபூபா முப்தியின் தேசவிரோத அறிக்கைகளை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? ரவி சங்கர் பிரசாத் கேள்வி…
ரவி சங்கர் பிரசாத்

ஜம்மு அண்டு காஷ்மீர் கொடி மீண்டும் கொண்டுவரவில்லையென்றால் தேசிய கொடியை ஏற்றமாட்டேன் என்கிறார் மெகாபூபா முப்தி. ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் நாம் மத்திய சட்டங்களை அப்ளை செய்கிறோம். ஜம்மு அண்டு காஷ்மீரில் ஊழல் தடுப்பு சட்டம் போன்ற சட்டங்கள் அவர்களுக்கு வேண்டாம். ஏனென்றால் தொடர்ந்து அவர்களால் ஊழலில் ஈடுபட முடியும். சட்டப்பிரிவு 370 மீண்டும் கொண்டு வர சீனாவின் உதவியை பெறுவோம் என்று முதல் அமைச்சர்களாக இருந்தவர்கள் சொல்கிறார்கள். இது தேசவிரோத நடவடிக்கை.

பரூக், மெகபூபா முப்தியின் தேசவிரோத அறிக்கைகளை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? ரவி சங்கர் பிரசாத் கேள்வி…
பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தேசியத்தை தெளிவாகவும், திட்டவட்டமாகவும் கூறுகிறார்கள். 370வது பிரிவை அசல் வடிவத்தில் மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறதா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரின் அறிக்கைகளை காங்கிரஸ் ஆதரிக்கிறதா? குப்கர் பிரகடனத்தில் கூறப்பட்ட நோக்கத்துடன் அவர்கள் இருக்கிறார்களா என்பதை காங்கிரஸ் சொல்ல வேண்டும்.