• February
    25
    Tuesday

Main Area

Main



ஓ.ப.ரவீந்திரநாத் குமார், MP, மேல ஒரு கோடு

ravindranath kumar
ravindranath kumar

நாட்டின் அனைத்து நாடாளுமன்ற‌ தொகுதிகளுக்கும் (வேலூர் மாதிரி ஒரு சில தொகுதிகள் தவிர்த்து) ரிசல்ட் வருவதற்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. ஆனால், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேனி தொகுதிக்கு  மட்டும் ரிசல்ட் அறிவிக்கப்பட்டு விட்டது போல. ஆளுங்கட்சி மேல் அவதூறு கிளப்புவதற்காக வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோனெல்லாம் போகுறபோக்கில் சொல்லப்படும் பகீர் குற்றச்சாட்டு அல்ல இது.  கீழே இணைக்கப்பட்டிருக்கும் படத்தை ஒரு தடவை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.

theni mp

ஆம். தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பகுதியில் எழும்பியுள்ள அன்னபூரணி ஆலயத்திற்கு பேருதவி புரிந்தவர்கள் பெயர்கள் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஏரியா என்பதால் டீஃபால்ட்டாக ஜெயலலிதா பெயர் இடம்பெறுவது புதிதல்ல. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் பெயர் இடம்பெறுவதும் தவறானதல்ல. ஆனால், பெயருக்கு முன்பாக வரும் அடைமொழிதான் ஆச்சர்யப்படுத்துகிறது. தேனி நாடாளுமன்ற உறுப்பினராம்.

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், சில பல சவுகரியங்கள் கிடைக்கும் என்பது உண்மைதான். சந்தேகத்திற்கிடமான வகையில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் உள்ளிட்டவையும் அதில் அடங்கும் என வைத்துக்கொண்டாலும், ரிசல்ட் வெளிவருவதற்கு முன்பாக எம்.பி. கார் பாஸ், லட்டர் பேட் எல்லாம் ரெடி பண்ணி வைத்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கம் எல்லாம் வேற லெவல்.

2018 TopTamilNews. All rights reserved.