17-ஆம் தேதி முதல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்ற முடிவு

தமிழக நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜூன் 17-ஆம் தேதி முதல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க பொதுச் செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா வெளியிட்டுள்ள ஆறிக்கையில், “அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிப் பொருள்கள் சரியான எடையில் தரமான உணவுப் பொருள்களை வழங்க வேண்டும். கட்டாய இறக்குகூலி வசூலிக்கக் கூடாது, கரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு (ரூ.50 லட்சம்) திட்டத்தில் சேர்க்க வேண்டும். சென்னை சைதாப்பேட்டை கடை எண்:5-ல் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த ஊழியர் சுரேஷ் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை ரூ.50 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். விற்பனையாக ரூ.500 மதிப்புள்ள மளிகை தொகுப்பு பொருள்களை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும்.

கட்டாயப்படுத்தி கட்டுபாடற்ற பொருள்களை நியாய விலைக்கடைகளில் விற்பனைக்கு அனுப்புவதை தவிர்க்கப்பட வேண்டும். மேலும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் மற்றும் மே, ஜூன் மாதத்திற்கான ஊக்கத் தொகை ரூ.2500 இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மேற்கண்ட ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும். காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்தும் ரேஷன் கடைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். மேலும் மகளிர் சுயஉதவிக்குழு கடைகளுக்கும், கூட்டுறவு நியாயவிலைக்கடை நிறுவனங்களுக்கும் விளிம்பு தொகை வழங்கப்பட வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற ஜூன் 17-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Popular

புழல் வாடகை பிரச்னையால் தற்கொலை விவகாரம்! – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

புழலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்ததால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த புழல் விநாயகபுரத்தைச்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 10,268 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

`முகக்கவசம் அணிவதில்லை; அலட்சியமாக இருக்கிறார்கள்!’- திருச்சி மக்கள் மீது ராதாகிருஷ்ணன் வருத்தம்

திருச்சி மற்றும் பல பகுதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணிவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் மிக அலட்சியமாக இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று...