ஆனைக்கட்டி நியாய விலைக்கடை விவகாரம்- அதிகாரிகள் மீது பழங்குடியின பெண்கள் புகார்

 

ஆனைக்கட்டி நியாய விலைக்கடை விவகாரம்- அதிகாரிகள் மீது பழங்குடியின பெண்கள் புகார்

கோவை

ஆனைக்கட்டி பகுதியில் பழங்குடியின பெண்கள் நடத்திவரும் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து, பொருட்களை வைத்துச்சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் 2 நியாய விலை கடைகளின் வாயிலாக பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நியாய விலைக்கடைகளை சொசைட்டியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மகளிர் குழுவினர் புகார் அளித்தனர். அப்போது, கடைகளை பழங்குடியின பெண்களே தொடர்ந்து நடத்த ஆட்சியர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனைக்கட்டி நியாய விலைக்கடை விவகாரம்- அதிகாரிகள் மீது பழங்குடியின பெண்கள் புகார்

இந்த நிலையில், பூட்டப்பட்டிருந்த கடைகளின் பூட்டை உடைத்து அரசு அதிகாரிகள் பொருட்களை வைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தட்சணா மற்றும் சின்ன ஜம்புகண்டி மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர். அப்போது, ஆட்சியின் உறுதிமொழியை மீறி கடைகளின் பூட்டை உடைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக, காவல் கண்காணிப்பாளர், உயர்நீதிமன்ற பதிவாளர் மற்றும் ஆதிவாசிகள் சங்க கூட்டமைப்பிற்கும் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.