தண்டையார்பேட்டை அருகே குப்பையில் ரேஷன் அரிசி! – அதிர்ச்சியில் மக்கள்

 

தண்டையார்பேட்டை அருகே குப்பையில் ரேஷன் அரிசி! – அதிர்ச்சியில் மக்கள்

ஒரு வேளை உணவுக்கு கூட வழியின்றி மக்கள் அவதியுறும் நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் குப்பையில் பிளாஸ்டிக் பைகளில் அரிசி கொட்டப்பட்டு இருந்தது வேதனை அளிக்கும் வகையிலிருந்தது.
நாடு முழுக்க கொரோனா பாதிப்பு காரணமாக லட்சக் கணக்கான மக்கள் ஒரு வேலை உணவுக்கு வழியின்றி அவதியுறுகின்றனர். மதுரையில் டிரைவராக பணியாற்றி வந்த ஒருவர் 10 கிலோ ரேஷன் அரிசி வாங்க 80 கி.மீ சைக்கிள் பயணம் செய்து வந்தாக செய்தியை பார்த்து வருகிறோம்.

தண்டையார்பேட்டை அருகே குப்பையில் ரேஷன் அரிசி! – அதிர்ச்சியில் மக்கள் தண்டையார்பேட்டை அருகே குப்பையில் ரேஷன் அரிசி! – அதிர்ச்சியில் மக்கள்

அதே நேரத்தில் டன் கணக்கில் அரசின் உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்குகளில் அரிசி, கோதுமை வீணாகி வருவதாக செய்திகள் வருவதைப் பார்த்திருக்கிறோம். தற்போது ரேஷன் அரிசியை சிலர் பைகளில் கொண்டுவந்து குப்பையில் கொட்டியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தண்டையார்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள தாண்டவராயன் தெருவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகளில் அரிசி கொட்டப்பட்டு இருந்தது. இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தண்டையார்பேட்டை அருகே குப்பையில் ரேஷன் அரிசி! – அதிர்ச்சியில் மக்கள்

 

ஆனால், இதைப் பற்றி யாரும் பெரிதாக கவலைப்பட்டது போலத் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து குப்பைத் தொட்டியில் அரிசி கொட்டப்பட்டுள்ள படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அரிசியை வீணாக்கியவர்களை கண்டறிந்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.