இனி வீடற்று வீதிகளில் வாழும் மக்களுக்கும் ரேசன் கார்டு

இனி வீடற்று வீதிகளில் வாழும் மக்களுக்கும் ரேசன் கார்டு

வீடு இல்லாமல் வீதிகளில் வாழும் மக்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்குவது அரசின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலத்தில் தான் இந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இனி வீடற்று வீதிகளில் வாழும் மக்களுக்கும் ரேசன் கார்டு

கேரள மாநிலத்தின் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி. ஆர். அணில் செய்தியாளர்களிடம் பேசியபோது, வாடகை வீடுகளில் வசிப்போர் சுய பிரமாண பத்திரங்களை சமர்ப்பித்தால் உடனடியாக அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

இனி வீடற்று வீதிகளில் வாழும் மக்களுக்கும் ரேசன் கார்டு

அவர் மேலும், வீடுகள் இல்லாமல் வீதிகளில் வாழும் மக்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரேசன் கார்டுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். வீதிகளில் வாழும் மக்களுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்குவதே அரசின் நோக்கம் என்று தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு கேரள மக்களிடையே பரபரப்பையும், வீடற்று வாழ்வோருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.