ஜி.எஸ்.டி. உள்ளிட்ட சீர்த்திருத்தங்கள் வளர்ச்சியை அதிக வளர்ச்சியாக மாற்ற தவறிவிட்டன…. மூடிஸ் கருத்தால் மோடி அரசுக்கு தலைவலி

ஜி.எஸ்.டி. உள்ளிட்ட சீர்த்திருத்தங்கள் வளர்ச்சியை அதிக வளர்ச்சியாக மாற்ற தவறிவிட்டன…. மூடிஸ் கருத்தால் மோடி அரசுக்கு தலைவலி

சர்வதேச தர நிர்ணய நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் கடன் தர மதிப்பீட்டை எதிர்மறையான கண்ணோட்டத்துடன் Baa3 என தரநிலையை குறைத்துள்ளது. நீண்டகால மெதுவான வளர்ச்சி, அதிகரிக்கும் கடன் மற்றும் நிதி அமைப்பில் நிலவும் தொடர்ச்சியான அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவின் கடன் மதிப்பீட்டை குறைத்துள்ளதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. உள்ளிட்ட சீர்த்திருத்தங்கள் வளர்ச்சியை அதிக வளர்ச்சியாக மாற்ற தவறிவிட்டன…. மூடிஸ் கருத்தால் மோடி அரசுக்கு தலைவலி

மூடிஸ் நிறுவனத்தின் துணை தலைவரும், மூத்த கடன் அதிகாரியுமான வில்லியம் பாஸ்டர், இந்தியாவின் கடன் மதிப்பீட்டை குறைத்தது குறித்து கூறியதாவது: ஜி.எஸ்.டி., திவால் சட்டம், எப்.ஆர்.பி.எம். போன்ற சீர்த்திருங்கள் பலனை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் நிறுவனம் 2017ல் இந்தியாவின் இறையான்மை தரமதிப்பீட்டை மேம்படுத்தியது. சீர்திருத்தங்கள் வணிகத்தை எளிதாக்குவதற்கான சூழலில் ஒட்டுமொத்த முன்னேற்றம் மற்றும் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் பொறுப்புடன் இணைந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜி.எஸ்.டி. உள்ளிட்ட சீர்த்திருத்தங்கள் வளர்ச்சியை அதிக வளர்ச்சியாக மாற்ற தவறிவிட்டன…. மூடிஸ் கருத்தால் மோடி அரசுக்கு தலைவலி

துரதிருஷ்டவசமாக இந்த சீர்திருத்தங்கள் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியில் சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளன. நிதிப்பற்றாக்குறை இலக்கு எட்டப்படவில்லை, கடன் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கிறது. இது இந்தியாவின் சகநாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு கவலை அளிப்பதாக உள்ளது. அதிகமான நாடுகள் எதிர்மறையான இறையாண்மை மதிப்பீட்டு நடவடிக்கையை காணும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மோடி தலைமையிலான மத்திய அரசு அன்னிய முதலீட்டை ஈர்க்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த சூழ்நிலையில், இந்தியாவின் கடன் தர மதிப்பீட்டை Baa2-லிருந்து மிகவும் குறைந்த முதலீட்டு தரமான Baa3ஆக மூடிஸ் குறைத்து இருப்பது மத்திய அரசின் முயற்சிகளுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.