• August
    24
    Saturday

Main Area

Main



என் மதத்தை நிரூபிப்பதை காட்டிலும் நான் சாவது மேல்- மம்தா பானர்ஜி ஆவேசம்

மம்தா பானா்ஜி
மம்தா பானா்ஜி
Loading...

மேற்கு வங்கத்தில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: இந்து கோயிலுக்கு செல்வதற்கு முன் என் மதத்தை நிரூபிப்பதை காட்டிலும் இறந்து விடுவது மேல். என் மதத்தை உங்கள் முன் நிரூபிப்பதற்கு நீங்கள் ஒருவரும் இல்லை.

துர்கா பூஜை

என்னை குற்றம் சொல்லியவர்கள் மற்றும் எனது மத அடையாளத்தை கேள்வி எழுப்பியவர்களை காட்டிலும் எனக்கு அதிகம் சமஸ்கிருத வசனங்கள் தெரியும். நான் இந்து மற்றும் நான் அனைத்து நம்பிக்கையும் மதிக்கிறேன். மத அடிப்படையில் மக்களை பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. முந்தைய அரசுகளை காட்டிலும் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் அதிகளவில் துர்கா பூஜைகள் நடந்துள்ளது. 

மேற்கு வங்க பா.ஜ.தலைவர்கள்

எங்களுக்கு பாடம் எடுப்தை காட்டிலும், மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை முதலில் பாருங்கள். நான் அவருக்கு சவால் விடுகிறேன், எங்களது 8 ஆண்டு கால மத வேலைகளையும், முந்தைய அரசுகளின் நடவடிக்கையும் ஒப்பிட்டு பாருங்கள். நாங்கள் மனித நேயத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம் மற்றும் மதம் என்றால் மனிதநேயம். அது அன்பு மற்றும் மரியாதையை நமக்கு போதிக்கிறது. மக்களை பிரிக்க அது போதிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கமிட்டிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர, சிறுபான்மையினர் வாக்குகளை கவருவதற்காக முஸ்லிம் சமூகத்தை சமாதானப்படுத்தியதாக பா.ஜ.க. மீண்டும் குற்றஞ்சாட்டியது. இதையெல்லாம் குறிப்பிட்டுதான் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.