தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு

 

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி. ஆர் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 2500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதற்கு 800 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு திட்டத்தின் கீழ் வராதவர்களுக்கு இதுவரை தனியாரில் 3000 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த பரிசோதனைக்கட்டணம் தற்போது 1200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதியிலிருந்து இக்கட்டணக்குறைக்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைப்பு

பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் இன்று முதல் 3000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் பரிசோதனை மையங்களை சேர்ந்தவர்கள் நேரடியாக அவரவர் வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்தால் மட்டும் 300 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 1200 உடன் 300 ரூபாய் சேர்த்து 1500 ரூபாய் அளிக்க வேண்டும்.

ஆர்டி பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கு டெல்லியில் 800 ரூபாயும், மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000யும் வசூலிக்கப்படுவது குறிப்பிடதகக்து.