பெண் எம்.பி.க்களை அலறவைத்த எலி – வைரலாகும் வீடியோ

 

பெண் எம்.பி.க்களை அலறவைத்த எலி – வைரலாகும் வீடியோ

நாடாளுமன்றத்தில் நடந்த முக்கிய விவாதத்தின் போது எலி புகுந்ததால் பெண் எம்.பிக்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். இந்த களேபர வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

பெண் எம்.பி.க்களை அலறவைத்த எலி – வைரலாகும் வீடியோ

ஸ்பெயின் நாட்டில் அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுசானா டயஸ்-ஐ செனட்டராக நியமிக்க வாக்களிப்பது சம்பந்தமாக நாடாளுமன்ற அவையில் முக்கிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எலி ஒன்று நாடாளுமன்றத்திற்குள் அங்கும் இங்கும் ஓடியிருக்கிறது.

பெண் எம்.பி.க்களை அலறவைத்த எலி – வைரலாகும் வீடியோ

பெண் எம்.பிக்களின் காலில் ஓடியதால் அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர்.

இதனால் நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அந்த இடைவெளியில் எலி நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டது. பின்னர் மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. அப்போது அந்தலுசியன் தன்னிய சமூக செனட்டராக பெர்னாண்டோ லோபஸுக்கு பதில் சுசானா டயஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்திற்குள் புகுந்து களேபரம் செய்த எலியின் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.