குஜராத்தில் 50 ஆண்டுகளுக்குப்பிறகு காணப்பட்ட அரிய வகை நாய் !!

 

குஜராத்தில் 50 ஆண்டுகளுக்குப்பிறகு காணப்பட்ட அரிய வகை நாய் !!

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, குஜராத் காடுகளில் அரிதான ஆசிய காட்டு நாய் காணப்பட்டுள்ளது.

சஹ்யாத்ரி மலைத்தொடர்களில் 24 சதுர கி.மீ மலைப்பாங்கான நிலப்பரப்பில் பரவியிருக்கும் வான்ஸ்டா தேசிய பூங்காவில் அமைக்கப்பட்ட கேமராவில் அரிய வகை காட்டு நாய்கள் சென்றது படம்பிடிக்கப்பட்டுள்ளது. தோலின் விசித்திரமான அமைப்பு காரணமாக விசில் நாய் என்றும் அழைக்கப்படும் அந்த நாய்கள் கடைசியாக 1970 ஆம் ஆண்டில் காணப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

குஜராத்தில் 50 ஆண்டுகளுக்குப்பிறகு காணப்பட்ட அரிய வகை நாய் !!

“ஆனால் எத்தனை நாய்கள் இருக்கிறது என்ற கணக்கு உறுதிப்படுத்தப்படவில்லை. முதலில் பிப்ரவரி 20 அன்று ஒரு உள்ளூர்வாசியால் அந்த நாய் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை 2 இன் கீழ் இந்த நாய் பாதுகாக்க வேண்டிய விலங்காகும். ஏற்கனவே அங்கு அந்த நாய் இருப்பதாக வனத்துறையினர் சந்தேகித்திருந்தனர். கள ஊழியர்கள் ஒரு புள்ளி மானின் சடலத்தை பார்த்தபோது அது இறந்த விதம் குறித்து ஆராய்ந்தனர். அப்போதுதான் அந்த இடத்தை பார்வையிட்டபோது ஒரு காட்டு நாய் அந்த சடலத்தை சாப்பிடுவதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். பின்னர் கேமரா மூலம் அந்த நாய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அந்த காட்டு நாய் படம்பிடிக்கப்பட்ட தற்போது வெளியிடப்பட்டுள்ளது.