15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன பழைய 50 பைசா நாணயம் – அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன பழைய 50 பைசா நாணயம் – அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

எப்போதுமே பழைய பொருட்களுக்கு அது பயன்பாட்டில் இருந்த காலத்தில் மதிப்பே இருக்காது. ஆனால் தற்போது மார்க்கெட்டில் அதன் மதிப்பு தாறுமாறாக இருக்கிறது. ஏனென்றால் அவை அரிய வகை பொருட்களாக மாறிவிட்டன. அவற்றைக் காண்பதே அரிதினும் அரிதாகிவிட்டது. இதன் காரணமாகவே அவற்றின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சமீப காலமாக பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஏலத்தில் சக்கைபோடு போடுகின்றன.

15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன பழைய 50 பைசா நாணயம் – அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

அந்த வகையில் தற்போது பழைய 50 பைசா நாணயம் ஒன்று 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இது நாணயத்தின் மதிப்பை விட 284 மடங்கு அதிகமாகும். நாணயத்தின் ஒரு பக்கத்தில் இங்கிலாந்தின் சின்னமான கியூ தோட்டங்களின் வடிவமைப்பு அச்சிடப்பட்டுள்ளது. மறுபக்கம் சீனாவின் புகழ்பெற்ற பகோடா கோபுரம் பொறிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இந்த நாணயம் பிரிட்டன் அரசால் வெளியிடப்பட்டது.

15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன பழைய 50 பைசா நாணயம் – அதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

கியூ தோட்டம் திறக்கப்பட்டு 250 ஆண்டுகள் நிறைவடைந்ததன் காரணமாக 2 லட்சத்து 10 ஆயிரம் நாணயங்கள் வெளியிடப்பட்டன. eBay என்ற இணையதளத்தில் இதற்கான ஏலம் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. மொத்தமாக 37 பேர் இந்த நாணயத்தை ஏலத்தில் வாங்க போட்டி போட்டனர். இறுதியில் இந்திய மதிப்பில் 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. நாணயத்தில் பழமைவாய்ந்த கியூ தோட்டம் பொறிக்கப்பட்டதால் தான் இந்த விலைக்கு ஏலம் போனதாகக் கூறப்படுகிறது. தற்போது சமூக வலைதளவாசிகளை இந்த ஏலம் ஆச்சர்யமடைய வைத்துள்ளது.