“கற்பழித்த இன்ஸ்பெக்டர் ,கருக்கலைப்பு செய்த டாக்டர்”-அரசு மருத்துவர் அதிரடி கைது..

ஊரடங்கால் ஊருக்கு போக முடியாமல் பஸ் நிலையத்தில் தவித்த ஒரு சிறுமியை, ஒரு போலீஸ் அதிகாரி நான்கு மாதம் பலாத்காரம் செய்ததில் உண்டான கர்ப்பத்தை கலைத்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

ஒடிஷா மாநிலம் பிரமித்ராபூர் பகுதியில் மார்ச் 25ம் தேதி ஒரு 14 வயது சிறுமி தனியாக ஒரு கண்காட்சியைக் காண வந்திருந்தார்.அன்று இரவே நாடு முழுவதும் கொரானாவால் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால் ,அவர் ஊருக்கு போக முடியாமல் அலைந்த போது, அங்கு வந்த அந்த பகுதி இன்ஸ்பெக்டர் மாஜி என்பவர் அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று 4 மாத காலமாக கற்பழித்து வந்துள்ளார் .அதற்கு பிறகு அந்த பெண் கர்ப்பமான பிறகு அரசு மருத்துவர் டெபாசிஷ் கோஷ் என்பவர் ஜூன் 15ம் தேதி காவல் நிலையத்துக்கே வந்து அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்துள்ளார் .


இந்நிலையில் அந்த அரசு மருத்துவர் கோஷ் மீது சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது .இதனால் செவ்வாய்க்கிழமை கோர்ட் போக்ஸோ சட்டத்தில் அவரையும் கைது செய்து சிறையிலடைத்தது .அவரின் ஜாமீனை ரத்து செய்தது .இந்த வழக்கு இப்போது ஒடிஷாவில் பரபரப்பினை உண்டு பண்ணியுள்ளது .

Most Popular

மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல- ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...