darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



மயக்க ஊசி போட்டு, பாலியல் பலாத்காரம்: அ.ம.மு.க வேட்பாளர் மீது பெண் பரபரப்பு புகார்; வெளியான வீடியோ!

கதிர்காமு
கதிர்காமு

பெரியகுளம்: பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக வேட்பாளர் கதிர்காமு
kathirkamu
 

பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கதிர்காமு மீது பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் கடந்த 2015-ம் ஆண்டு கதிர்காமு மருத்துவமனையில்,  தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு தன்னை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியுள்ளார். 

கதிர்காமு மீது வழக்குப்பதிவு
harassment
 

அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயக்க ஊசி போட்டு, பாலியல் பலாத்காரம்
abused
 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு தந்தையின் சிகிச்சைக்காக கதிர்காமுவின் மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது மூட்டுவலிக்காக நானும் சிகிக்சை பெற முற்பட்டேன். அப்போது கதிர்காமு எனக்கு மயக்க ஊசி போட்டு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்து நான் அவரிடம் நியாயம் கேட்க, என்னை ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாகக் கூறி மிரட்டினார். இதை தொடர்ந்து என்னை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். 2017ஆம் ஆண்டு அவர் எம்எல்ஏ ஆன பிறகு அவரது அலுவலகத்துக்குச் சென்று என் புகைப்படங்கள், வீடியோவை கேட்டேன். அப்போது அவருடன் இன்னும் 3 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு அவர்களும் என் மீது ஆசைப்படுவதாகக் கூறினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்ஜாமீன் வழங்க மனுத்தாக்கல்
kathirkamu
 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கதிர்காமு,  இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இந்த வழக்கைச் சந்திக்க நான் தயாராக உள்ளேன். இது முழுக்க முழுக்க, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். மேலும் தனக்கு முன்ஜாமீன் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க:  தாயுடன் தகாத உறவு: மருத்துவமனையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்

2018 TopTamilNews. All rights reserved.