இந்தியாவில் ரேன்சேம்வேர் தாக்குதல் இருமடங்கு அதிகரிப்பு !

 

இந்தியாவில் ரேன்சேம்வேர் தாக்குதல் இருமடங்கு அதிகரிப்பு !

இணையத்தின் வாயிலாக கம்யூட்டரில் உள்ள தகவல்களை திருடி, முடக்கி, மிரட்டி பணம் பறிக்கும் ரேன்சேம்வேர் தாக்குதல் இந்தியாவில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

200 சதவீதம் அதிகரிப்பு – 4 லட்சம் புதிய தாக்குதல்

சைபர் பாதுகாப்பு நிறுவனமான செக்யூரைட், இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் அதே காலாண்டில், 200 சதவீதம் வரை ரேன்சேம்வேர் தாக்குதல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சம் புதிய தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரேன்சேம்வேர் தாக்குதல் இருமடங்கு அதிகரிப்பு !

வீட்டிலிருந்து பணி – குறிவைக்கும் கும்பல்கள்

ஊரடங்கு காரணமாக பல நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் சூழலில், மிகப்பெரிய சைபர் பாதுகாப்பு இல்லாமல் ஐடி உள்ளிட்ட பல துறை சார்ந்த நிறுவனங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரேன்சேம்வேர் தாக்குதல் இந்தியாவில் அதிகரித்திருப்பதாக செக்யூரைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் முன்னதாக பெரும் நிறுவனங்களின் கம்யூட்டருக்குள் ஊடுருவி, அவற்றில் உள்ள தகவல்களை மட்டுமே முடக்கி பணம் பறித்து வந்த ரேன்சேம்வேர் கும்பல்கள், தற்போது முக்கிய தகவல்களை ஆன்லைனில் வெளியிட்டு விடுவதாகவோ அல்லது மறுவிற்பனை செய்து விடுவதாக மிரட்டியும் பணம் பறிப்பில் ஈடுபடுவதாக செக்யூரைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரேன்சேம்வேர் தாக்குதல் இருமடங்கு அதிகரிப்பு !

பல ஐடி நிறுவனங்களின் பணிகள் வீட்டிலிருந்த படியே ஊழியர்களின் கணிணி – இணையம் வாயிலாக நடைபெறுவதால் அவற்றை குறி வைத்தும் ரேன்சேம்வேர் கும்பல் கைவரிசை காட்டி வருவதாக செக்யூரைட் நிறுவனம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. – முத்துக்குமார்