தே.ஜ. கூட்டணியில் ரங்கசாமி; திமுகவை எச்சரிக்கும் பாஜக!

 

தே.ஜ. கூட்டணியில் ரங்கசாமி; திமுகவை எச்சரிக்கும் பாஜக!

புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தே.ஜ. கூட்டணியில் ரங்கசாமி; திமுகவை எச்சரிக்கும் பாஜக!

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தி வந்த நிலையில் ஆளும் கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். இதனால் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்சிக்கு கோர யாரும் முன்வரவில்லை. அத்துடன் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணில் தொடருமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமியை மதசார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளது. காரைக்கால் திமுக அமைப்புச் செயலாளர் நாஜிம், ரங்கசாமி தலைமையில் மதசார்பற்ற கூட்டணி அமைக்க திமுக கூட்டணி கட்சிகள் விரும்புகின்றன. அதேபோல் ஸ்டாலினும் அதை விரும்புவதாக கூறியுள்ளார்.

தே.ஜ. கூட்டணியில் ரங்கசாமி; திமுகவை எச்சரிக்கும் பாஜக!

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், மக்கள் நலன் கருதி ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பார். தோல்வி பயத்தால் மக்களைக் குழப்பும் வேளையில் புதுச்சேரி திமுக -காங்கிரஸ் ஈடுபடுகிறது. திமுக – காங்கிரசிற்கு தோல்வி பயம் வந்து விட்டது என்றார்.