சார்பட்டா பரம்பரை ஆன புதுவை முதல்வர் ரங்கசாமி

 

சார்பட்டா பரம்பரை ஆன புதுவை முதல்வர் ரங்கசாமி

சினிமா பிரபலங்களின் பிறந்தநாளுக்கு கட் – அவுட், பேனர்கள் வைப்பது போலவே புதுச்சேரி மாநிலத்தின் அரசியல் பிரமுகர்களுக்கும் பேனர் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்தினை கட்சியினர் செய்து வருவது வழக்கம். அதுவும் என். ரங்கசாமியின் பிறந்த நாளின்போது இந்தக் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. அவர் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் கூட அவர் பிறந்த நாளின்போது கட்-அவுட், பேனர்கள் வைத்து கட்சியினர் கொண்டாடி வந்தனர்.

சார்பட்டா பரம்பரை ஆன புதுவை முதல்வர் ரங்கசாமி

இந்த முறை அவர் முதல்வராக இருக்கிறார். இதையடுத்து அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை புதுச்சேரியின் முதல்வராக 2 முறை பதவி வகித்தவர் ரங்கசாமி. அதன் பின்னர் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலினால் 2005 ஆம் ஆண்டு ரங்கசாமியின் முதல்வர் பதவியை பறித்தது காங்கிரஸ்.

சார்பட்டா பரம்பரை ஆன புதுவை முதல்வர் ரங்கசாமி

இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி 2011ம் ஆண்டில் என்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் துவங்கி தொடங்கினார். கட்சி தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள்ளேயே நடைபெற்ற 2011 சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார்.

என். ரங்கசாமியை எளிமையானவர், எளிமையான முதல்வர் என்று அம்மாநில மக்கள் அழைக்கின்றனர். காமராஜரின் தீவிர பக்தரான என். ரங்கசாமி பெரும்பாலும் டூவீலரில் தான் பல இடங்களுக்கும் சென்று வருவார். அங்கு சாலையோர டீ கடைகளில் பொதுமக்களுடன் ஒருவராக அமர்ந்து சாப்பிடுவார். விளையாட்டு மைதானத்தில் சென்று விளையாடுவார். இதனாலேயே மக்கள் அவர் எளிமை முதல்வன் என்று அழைக்கின்றனர். ஆனால் அவரின் பிறந்தநாளை கட்சியினர் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

சார்பட்டா பரம்பரை ஆன புதுவை முதல்வர் ரங்கசாமி

இந்த வருட பிறந்த நாளின் போது அவரை, சார்பட்டா பரம்பரை படத்தின் போஸ்டர் போல பேனர் வைத்துள்ளனர். அப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக இருப்பார். அதைபோல் ரங்கசாமியை வடிவமைத்துள்ளனர். மேலும் பாகுபலி படத்தில் வரும் பிரபாஸ் போல பேனர்கள் வைத்துள்ளனர். மறைந்த கர்மவீரர் காமராஜரின் தீவிர பக்தர் என்பதால் காமராஜருடன் அவர் அமர்ந்து உணவு அருந்துவது போன்ற பேனர்களும் கட் அவுட்களும் வைத்துள்ளனர்

ஒவ்வொரு பேனரிலும் கட் அவுட்களிலும் புதுச்சேரியின் குலதெய்வமே, புதுச்சேரியின் வழிகாட்டியை, புதுவையின் நம்பிக்கையை, புதுவையின் மக்கள் முதல்வரே, புதுவையின் ஆன்மீகச் செம்மல் என்று அடைமொழி கொடுத்து அசத்தி இருக்கின்றனர் கட்சியினர்.